• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

1000 ரூபாயை 52 லட்சம் ரூபாயாக மாற்றிய ரிலையன்ஸ்..!! டானுக்கெல்லாம் டான் என நிரூபித்த அம்பானி..!! | Reliance 1977 IPO: How ₹1,000 Became Over ₹52 Lakh — and Why Investors Are Watching Jio’s Record IPO

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
1000 ரூபாயை 52 லட்சம் ரூபாயாக மாற்றிய ரிலையன்ஸ்..!! டானுக்கெல்லாம் டான் என நிரூபித்த அம்பானி..!! | Reliance 1977 IPO: How ₹1,000 Became Over ₹52 Lakh — and Why Investors Are Watching Jio’s Record IPO
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1000 ரூபாயை 52 லட்சம் ரூபாயாக மாற்றிய ரிலையன்ஸ்..!! டானுக்கெல்லாம் டான் என நிரூபித்த அம்பானி..!!

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ தான் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த சமயத்தில் ஜியோவின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வை பலரும் நினைவு கூறுகின்றனர். 1977-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடப்பட்டது. அதில் முதலீடு செய்தவர்கள் அள்ள அள்ள குறையாத லாபம் பார்த்துள்ளனர்.

1977ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முதல் ஐபிஓவை வெளியிட்டார். அப்போது ஒரு பங்கின் மதிப்பு வெறும் 10 ரூபாய் தான். அதாவது அன்றைய தேதிக்கு ஒரு நபர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வில் வெறும் 1,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், அவருக்கு 100 பங்குகள் கிடைத்திருக்கும். இன்று ஒரு பங்கின் மதிப்பு 1215 ரூபாய். இதற்கு முன்பு ஒரு பங்கின் விலை 1595 ரூபாய் வரை கூட சென்றுள்ளது.

1000 ரூபாயை 52 லட்சம் ரூபாயாக மாற்றிய ரிலையன்ஸ்..!! டானுக்கெல்லாம் டான் என நிரூபித்த அம்பானி..!!

கடந்த பல தசாப்தங்களாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது வணிகத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது. பெட்ரோகெமிக்கல்ஸ், ரீடெய்ல் மற்றும் ஜியோ போன்ற டிஜிட்டல் சேவைகள் என பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி பயணத்தின் போது, நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு தொடர்ந்து போனஸ் பங்குகள் மற்றும் பங்கு பிரிப்பு போன்ற பல லாபகரமான நன்மைகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, 1977இல் வாங்கப்பட்ட 100 பங்குகளின் மதிப்பு தற்போது பல மடங்கு பெருகி இருக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கிய போனஸ் பங்குகள் அடிப்படையில் 100 பங்குகள் 4,096 பங்குகளாக உயர்ந்துள்ளன. மேலும் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளும் கூடுதலாக கிடைத்தன. இவற்றை எல்லாம் வைத்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு உயர்வு காரணமாக, அன்று முதலீடு செய்யப்பட்ட 1,000 ரூபாய் இன்று வளர்ந்து 52 லட்சத்திற்கும் மேல் லாபத்தை ஈட்டி தந்துள்ளது.

இது இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் மிகப்பெரிய லாபம். 1000 ரூபாய் 50 ஆண்டுகளில் 52 லட்சம் ரூபாயாக மாறியுள்ளது என்பதே ரிலையன்ஸின் வளர்ச்சி நமக்கு உணர்த்தும் பாடம். 1977இல் ரிலையன்ஸ் ஐபிஓ-வில் இலட்சக்கணக்கான சில்லறை முதலீட்டாளர்கள் பங்கேற்றது இந்திய பொருளாதார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அந்த வகையில் தந்தையை தொடர்து மகன் முகேஷ் அம்பானி மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட உள்ளார்.

ஜியோ ஐபிஓவும் முதலீட்டாளர்களின் கவனம் பெற்றுள்ளது. எப்படியாவது இந்த பங்கினை வாங்க வேண்டும் என போட்டிகள் அதிகரித்துள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற ஒரு மேஜிக் லாபத்தை ஜியோவும் கொடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே இதற்கு காரணம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Reliance 1977 IPO: How ₹1,000 Became Over ₹52 Lakh — and Why Investors Are Watching Jio’s Record IPO

1000 ரூபாயை 52 லட்சம் ரூபாயாக மாற்றிய ரிலையன்ஸ்..!! டானுக்கெல்லாம் டான் என நிரூபித்த அம்பானி..!! / Reliance Industries’ 1977 IPO, launched by Dhirubhai Ambani at ₹10 per share, turned a ₹1,000 investment into more than ₹52 lakh today through six bonus issues and the value created by businesses.

Story first published: Thursday, October 15, 2026, 16:16 [IST]

Other articles published on Oct 15, 2026

Read More

Previous Post

ரிலையன்ஸின் IPO ஏற்படுத்திய தாக்கம் என்ன? சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட உதய் கோடக்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

செமிகண்டக்டர் சூழலமைப்புத் திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார்…

Next Post
செமிகண்டக்டர் சூழலமைப்புத் திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார்…

செமிகண்டக்டர் சூழலமைப்புத் திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin