மோடி 3ஆவது முறையாக பதவியேற்கும் விழா இன்று இரவு 7: 15 மணிக்கு நடக்கிறது. இதற்காக டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், பல்வேறு மாநில கவர்னர்கள், மாநில முதல்-மந்திரிகள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இவ்விழாவில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலத்தீவு ஜனாதிபதி முகமது முயிசு, சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி அஹமது அபிப், வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரிஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகியோர் பங்கேற்கின்றனர்.
டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரபலங்கள் மற்றும் உலகத்தலைவர்கள் பங்கேற்க இருப்பதால் ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்க இருப்பதை பா.ஜ.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

