கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் மற்றும் ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்காலிக கூடாரம் அமைக்க முயன்றபோது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரரை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் சாதகமான அறிவிப்பொன்றை வெளியிடும் வரை, குறித்த இடத்திலிருந்து வெளியேறப் போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.


