மலேசியாவைப் பாதித்துள்ள எல்லை தாண்டிய புகைமூட்ட பிரச்சினையைக் கையாள்வதில் அரசாங்கம் எங்களால் முடிந்த சிறந்ததைச் செய்துள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்தோனேசியாவுக்கு எதிராக புத்ராஜெயா மென்மையான போக்கைக் கையாள்வதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். யுனிவர்சிட்டி மலாயாவின் 5ஆவது குடியிருப்பு கல்லூரியில், மாணவர் குடியிருப்பு திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் எங்களால் முடிந்த சிறந்ததைச் செய்துள்ளோம், என்று சுருக்கமாகக் கூறினார். மலேசியா புகைமூட்ட […]
Read More
