• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்த பவுலிங்கை வைத்து உலகக்கோப்பையை வெல்ல முடியாது.. இந்திய அணியை சாடிய முன்னாள் வீரர்! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்த பவுலிங்கை வைத்து உலகக்கோப்பையை வெல்ல முடியாது.. இந்திய அணியை சாடிய முன்னாள் வீரர்! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 15, 2026 4:59 PM IST

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மயங்க் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் சேர்ந்து வீசிய 8 ஓவர்களில் 104 ரன்களை வாரிக்கொடுத்தனர்.

இந்திய அணி
இந்திய அணி

ஐதராபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் தற்போது 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் மோசமான பந்துவீச்சு செயல்பாட்டையும், அணியின் தேர்வையும் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதன் கேப்டன் ஷாய் ஹோப் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இந்திய சுற்றுப்பயணத்தில் தனது 4வது சதத்தைப் பதிவு செய்த அவர், அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 247 ரன்கள் என்ற பிரம்மாண்ட நிலைக்கு உயர்த்தினார்.

248 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, அதிரடியாக போராடிய போதிலும் இறுதியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மயங்க் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் சேர்ந்து வீசிய 8 ஓவர்களில் 104 ரன்களை வாரிக்கொடுத்தனர். அதேபோல, சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 4 ஓவர்களில் 45 ரன்களை விட்டுக்கொடுத்தார். பிரின்ஸ் யாதவ் மட்டுமே ஓரளவு சிறப்பாக பந்துவீசி 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியதாவது-

“இந்திய அணி தோற்றதற்கு பந்துவீச்சாளர்களே முழு காரணம். 247 ரன்கள் என்பது மிகவும் அதிகம். மோசமான பந்துவீச்சால் மட்டுமே நாம் தோற்றோம். இது முதல்முறை அல்ல; 5 போட்டிகள் கொண்ட தொடரில் வழக்கமாக பேட்டர்கள் 3 போட்டிகளையும், பந்துவீச்சாளர்கள் 2 போட்டிகளையும் வென்று தருவார்கள்.

ஆனால் இங்கு பந்துவீச்சாளர்கள் போட்டிகளை வென்று தருவதே இல்லை. இந்த பந்துவீச்சு கூட்டணியை வைத்துக்கொண்டு இன்னும் 2 ஆண்டுகளில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையை உங்களால் நிச்சயமாக வெல்ல முடியாது,” என்று முகமது கைஃப் கடுமையாகச் சாடினார்.

தோல்வி குறித்து பேசிய இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சில் திட்டமிட்டபடி சரியான லென்த்களில் பந்துவீசத் தவறியதே தோல்விக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொண்டார். 250 ரன்களை சேஸ் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஆட வேண்டியிருந்தது என்றும், பந்துவீச்சில் விட்ட தவறே பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி மற்றும் 5வது டி20 போட்டி வரும் சனிக்கிழமை பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Read More

Previous Post

”இந்தியா – பாகிஸ்தான் எல்லைபோல் டெல்லி மாறியுள்ளது” – அபிஜித் தீப்கே பரபரப்பு பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பெட்டி, படுக்கையோடு அமெரிக்காவை காலி செய்யும் இந்தியர்கள்.. 3 வருடத்தில் டபுள் மடங்கு உயர்வு! | US to India Reverse Brain Drain: Xpheno Data Shows Tech Returns Doubled Over Three Years Amid Visa Crises and AI Layoffs

Next Post
பெட்டி, படுக்கையோடு அமெரிக்காவை காலி செய்யும் இந்தியர்கள்.. 3 வருடத்தில் டபுள் மடங்கு உயர்வு! | US to India Reverse Brain Drain: Xpheno Data Shows Tech Returns Doubled Over Three Years Amid Visa Crises and AI Layoffs

பெட்டி, படுக்கையோடு அமெரிக்காவை காலி செய்யும் இந்தியர்கள்.. 3 வருடத்தில் டபுள் மடங்கு உயர்வு! | US to India Reverse Brain Drain: Xpheno Data Shows Tech Returns Doubled Over Three Years Amid Visa Crises and AI Layoffs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin