குருக்கள்மடம் மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வு நடவடிக்கையின்போது மண்டை ஓடு உள்ளடங்களாக பல என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அறிக்கை தங்களுக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்த்துள்ளார்.
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் இறுத்திநாள் நடவடிக்கைகள் நேற்று (14.10.2026) நடைபெற்றது.
சந்தேகத்திற்குமான மனிதப் புதைக்குழி
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”குருக்கள்மடம் சந்தேகத்திற்குமான மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வு நடவடிக்கைகள் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக கடந்த 06.10.2026 அன்று 14.10.2026 வரை கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வந்தன.
இதன்போது மனித எச்சங்கள் நியாயமாக நம்பக்கூடிய பல பொருட்கள் மண்டை ஓடு உள்ளடங்களாக என்புத் தொகுதிகள் வெட்டுக் காயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவை நீதிமன்றிலே சான்று பொருட்களாக பாரப்படுத்தப்பட்டு சட்ட வைத்திய அதிகாரிகளினால் மேலதிக பகுப்பாய்வுகளுக்காக கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றன.
எதிர்வரும் காலங்களிலே இந்த அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட தொல்லியல் பேராசிரியர் ரஜ் சோமதேவவுடைய அறிக்கை மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளுடைய அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இது தொடர்பான முழுமையான விவரங்களை எமக்கு ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க முடியும்.
குறிப்பாக, மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டு, நிலப்பகுதி செயற்கையான முறையில் மறைக்கப்பட்டிருந்தது” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

