• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் இணையத்திற்கு அரசு தடை விதிக்கக் காரணம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் இணையத்திற்கு அரசு தடை விதிக்கக் காரணம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 15, 2026 3:28 PM IST

இந்திய பயனர்களின் தரவுகளை பகிரவோ அல்லது குறிப்பிட்ட நேரத்தில் சேவையை முடக்கவோ அமெரிக்க அரசு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அழுத்தம் தர முடியும் என்ற சூழல் நிலவுகிறது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவை மற்றும் அதனால் இந்தியா சந்திக்கும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

எலான் மாஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவை, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக ‘தக்ஷஷிலா இன்ஸ்டிடியூஷன்’ (Takshashila Institution) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் ஸ்டார்லிங்க் பயன்பாட்டை அனுமதிப்பது, அவசர காலங்களில் நாட்டின் இணைய அணுகலை கட்டுப்படுத்தும் அரசின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன் இராணுவத்தின் முதுகெலும்பாக ஸ்டார்லிங்க் செயல்பட்டது. எனினும், எலான் மாஸ்க் தனது சொந்த விருப்பத்தின் பேரில் கிரிமியா பகுதியில் இச்சேவையை முடக்கி உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளை பாதிப்புக்குள்ளாக்கினார்.

இதேபோல, எலான் மாஸ்க்கின் தன்னிச்சையான போக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான நெருக்கமும், அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் (US Defence) ஸ்பேஸ் எக்ஸ் வைத்துள்ள தொடர்புகளும் இந்தியாவிற்கு கவலையளிப்பதாக உள்ளது. அமெரிக்காவின் நலன்களுக்காக, இந்திய பயனர்களின் தரவுகளை பகிரவோ அல்லது குறிப்பிட்ட நேரத்தில் சேவையை முடக்கவோ அமெரிக்க அரசு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அழுத்தம் தர முடியும் என்ற சூழல் நிலவுகிறது.

மணிப்பூர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் உரிமமின்றி பயன்படுத்தப்பட்ட ஸ்டார்லிங்க் முனையங்கள் (Terminals) கண்டறியப்பட்டபோது, இந்திய எல்லைக்குள் ஸ்டார்லிங்க் சிக்னல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மாஸ்க் கூறினார். ஆனால், குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) இயங்கும் இந்த செயற்கைக்கோள்களின் ‘ஜியோஃபென்சிங்’ (Geofencing) குறைபாடுகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் இச்சேவை தொடர்ந்து இயங்கியது தெரியவந்தது. வழக்கமான செயற்கைக்கோள்களைப் போலல்லாமல், அதிவேகமாக நகரும் இந்த எல்.இ.ஓ செயற்கைக்கோள் சிக்னல்களை பாரம்பரிய ஜாமிங் (Jamming) முறைகளால் முற்றிலும் முடக்குவது மிகவும் கடினம்.

இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் பாதுகாப்பு முகமைகள் சாட்டிலைட் இணைய நிறுவனங்களுக்கு கடும் நிபந்தனைகளை விதித்துள்ளன. அதாவது, அனைத்து இணைய தரவுகளும் (Traffic) இந்தியாவிற்குள் உள்ள ‘கேட்வே’ (Gateway) வழியே மட்டுமே செல்ல வேண்டும்.

செயற்கைக்கோள்களுக்கு இடையே (Inter-satellite links) தரவுகளை பரிமாறக் கூடாது. எல்லைப்பகுதியிலிருந்து 50 கி.மீ தொலைவிற்குள் சிறப்பு கண்காணிப்பு மண்டலங்களை ஏற்படுத்த வேண்டும். உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பான NavIC தொழில் நுட்பத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், செயற்கைக்கோள்களுக்கு இடையேயான விண்வெளி தரவு பரிமாற்றத்தை தரையில் உள்ள அமைப்புகளால் கண்காணிக்க முடியாது என்பதால் இந்த விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது கடினம் என அறிக்கை கூறுகிறது. மேலும், மொபைல் போன்களுடன் நேரடியாக செயற்கைக்கோளை இணைக்கும் D2D (Direct-to-Device) தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்டார்லிங்கின் ‘Gen 2’ விண்ணப்பத்தை இந்தியாவின் ‘IN-SPACe’ அமைப்பு நிராகரித்துள்ளது.

முக்கியமான தருணங்களிலோ அல்லது பேரிடர் காலங்களிலோ ஒரு தனியார் நிறுவனத்தின் முடிவை நம்பியிருப்பது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தானது என்பதால், அரசு இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

Read More

Previous Post

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம்

Next Post

பேஸ்புக் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி: 21 வயது இளைஞன் கைது – Sri Lanka Tamil News

Next Post
பேஸ்புக் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி: 21 வயது இளைஞன் கைது – Sri Lanka Tamil News

பேஸ்புக் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி: 21 வயது இளைஞன் கைது - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin