Last Updated:
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதம் மாறி இஸ்லாம் மதத்தை தழுவியவர்களுக்கு BC சான்றிதழ் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
மதம் மாறி இஸ்லாம் மதத்தை தழுவியவர்களுக்கு BC சான்றிதழ் வழங்க முடியாது என்கிற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் என்கிற சான்றிதழ் வழங்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பரமசிவம் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர் தனது பெயரை மாற்றிக் கொண்டதுடன் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சாதி சான்றிதழ் கோரியிருந்தார்.
இந்த விவகாரத்தில் மதம் மாறிய ஒருவர் முஸ்லீமாக இருக்க முடியுமே தவிர பிறப்பால் கிடைக்கக்கூடிய ஒரு பிரிவில் சான்றிதழ் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், மதம் மாறி இஸ்லாமை தழுவியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சாதிச்சான்றிதழ் தரக்கூடாது என்றும் மதம் மாறிய இஸ்லாமியர்கள் ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு பெற முடியாது என்றும் மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சிறப்பு சலுகைகளை வழங்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.


