• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சாயம் வெளுத்த AI, செமிகண்டக்டர் பங்குகள்.. அப்போ ஐடி பங்குகளுக்கு ராஜயோகம்.. TCS, Infosys-க்கு கொண்டாட்டம்!! | AI & Semiconductor Stocks Crash: Why Indian IT Giants Like TCS and Infosys Are Rallying Big

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சாயம் வெளுத்த AI, செமிகண்டக்டர் பங்குகள்.. அப்போ ஐடி பங்குகளுக்கு ராஜயோகம்.. TCS, Infosys-க்கு கொண்டாட்டம்!! | AI & Semiconductor Stocks Crash: Why Indian IT Giants Like TCS and Infosys Are Rallying Big
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சாயம் வெளுத்த AI, செமிகண்டக்டர் பங்குகள்.. அப்போ ஐடி பங்குகளுக்கு ராஜயோகம்.. TCS, Infosys-க்கு கொண்டாட்டம்!!

சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டில் இந்த வருடம் பெரும் லாபத்தைக் கொடுத்து வந்த செமிகண்டக்டார் மற்றும் ஏஐ நிறுவன பங்குகள் கடந்த 3 நாட்களாக பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இதற்கு நேர் எதிராக இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியிடும் சீசன் துவங்கியிருக்கும் வேளையில் 3வது நாளாக உயர்ந்து வருகிறது. ஏன் இந்த அந்தர் பல்டி..? ஐடி பங்குகள் தொடர்ந்து உயருமா.. ? போன்ற முக்கியமான கேள்விகள் தற்போது எழுந்து உள்ளது.

சாயம் வெளுத்த AI, செமிகண்டக்டர் பங்குகள்.. அப்போ ஐடி பங்குகளுக்கு ராஜயோகம்.. TCS, Infosys-க்கு கொண்டாட்டம்!!

சிப், செமிகண்டக்டர் சந்தைகள்

அக்டோபர் 13 -15ஆம் தேதிகள் மத்தியில் சிப், செமிகண்டக்டர் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. உதாரணமாகத் தென் கொரியா-வின் காஸ்பி இந்த வருடம் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் சிப் தேவைகள் அதிகரித்த காரணத்தால் தாறுமாறாக உயர்ந்தது.

ஆனால் கடந்த 3 நாட்களில் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது, Kospi இன்டெக்ஸ் அக்டோபர் 13ஆம் தேதி மட்டும் 7 சதவீதம் சரிந்துள்ளது, கடந்த 5 நாட்களில் சுமார் 17.76 சதவீதம் சரிந்துள்ளது.

சீனாவின் வருகை

இதேபோல் ஏஐ சிபிகளைத் தயாரிக்கும் சாம்சங், SK Hynix போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாகச் சீனாவின் ChangXin Memory Technologies (CXMT) நிறுவனம் புதிய டிசைன் கட்டமைப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த செமிகண்டக்டர் துறையை அதிர வைத்துள்ளது.

இதனால் சாம்சங், SK Hynix பங்குகள் ஓரே நாளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைப் பதிவு செய்துள்ளது.

ஏஐ நம்பி வாங்கிய கடன்

மேலும் அமெரிக்காவில் கிளவுட் சேவை நிறுவனமான CoreWeave Inc தனது ஏஐ உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக நிதி திரட்டும் நோக்கில் 2032ஆம் ஆண்டு முதிர்வு காலம் கொண்ட வெளியிடப்பட்ட பத்திரங்கள் தற்போது 1 டாலருக்கு 80 சென்ட் விகிதத்தில் வர்த்தகமாகத் துவங்கியுள்ளது.

அதாவது ஏஐ மீது முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற லாபம் வராது என்பதை முதலீட்டுச் சந்தை உணர துவங்கியுள்ளதால் இந்த இழப்பு ஏற்பட்டு உள்ளது. இது CoreWeave நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஏஐ நிறுவனங்களுக்கும், ஏஐ உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கும் ஆபத்தான எச்சரிக்கை மணியாக உள்ளது.

பணவீக்கம் தொடர் உயர்வு

இப்படி சிப் தயாரிப்பில் சீனாவின் வருகை, ஏஐ முதலீட்டில் லாபம் தொய்வு, ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தில் பல்வேறு கேள்விகள், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், குறிப்பாக அமெரிக்காவில் கணிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக பணவீக்கம் என முதலீட்டுச் சந்தையை பயமுறுத்தி வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டைத் தேடி இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பக்கம் திரும்பியுள்ளனர்.

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள்

டிசிஎஸ், ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பும், சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட ஏஐ – செமிகண்டக்டார் meltdown மூலம் டிசிஎஸ் பங்குகள் 9.73 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் இன்போசிஸ் 9.67 சதவீதமும், ஹெச்சிஎல் டெக் 14.69 சதவீதமும், விப்ரோ 7.28 சதவீதமும், டெக் மஹிந்திரா 6.75 சதவீதமும் உயர்ந்துள்ளது.

சரி இந்த உயர்வு தொடருமா..?

இது ஏஐ வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் மத்தியில் நிலவும் ஒரு தற்காலிகமான சூழ்நிலை மட்டுமே இந்திய ஐடி நிறுவனங்கள் ஏஐ துறைக்கான மாற்றுச் சக்தியாகவும், நிரந்தர தீர்வாகவும் இருக்காது என்பதே தற்போதைய நிலை.

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஏஜெண்டிக் ஏஐ மற்றும் ஆட்டோமேடெட் கோடிங் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து தான் வருகிறது. தற்போதைய அதிரடியான உயர்வு அனைத்தும் காலாண்டு முடிவுகள் மற்றும் ஏஐ துறையில் ஏற்பட்ட சரிவு மூலம் உருவானது எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் டிசிஎஸ், ஹெச்சிஎல் தொடர்ந்து ஏஐ பிரிவில் அதிகப்படியான வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்யத் துவங்கியுள்ளது நம்பிக்கை அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

AI & Semiconductor Stocks Crash: Why Indian IT Giants Like TCS and Infosys Are Rallying Big

AI & Semiconductor Stocks Crash: Why Indian IT Giants Like TCS and Infosys Are Rallying Big — சாயம் வெளுத்த AI, செமிகண்டக்டர் பங்குகள்.. அப்போ ஐடி பங்குகளுக்கு ராஜயோகம்.. TCS, Infosys-க்கு கொண்டாட்டம்!!

Story first published: Thursday, October 15, 2026, 11:11 [IST]

Other articles published on Oct 15, 2026

Read More

Previous Post

நாட்டை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மோடி பணிய மாட்டார்.. பிரபல பாடகி மேரி மில்பன் அதிரடி கருத்து! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கிள்ளான் பள்ளத்தாக்கின் சில பகுதிகள், மூடுபனி மோசமடைவதால், மிகவும் ஆரோக்கியமற்ற காற்றின் தரத்திற்கு அருகில் உள்ளது | Makkal Osai

Next Post
கிள்ளான் பள்ளத்தாக்கின் சில பகுதிகள், மூடுபனி மோசமடைவதால், மிகவும் ஆரோக்கியமற்ற காற்றின் தரத்திற்கு அருகில் உள்ளது | Makkal Osai

கிள்ளான் பள்ளத்தாக்கின் சில பகுதிகள், மூடுபனி மோசமடைவதால், மிகவும் ஆரோக்கியமற்ற காற்றின் தரத்திற்கு அருகில் உள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin