• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாட்டை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மோடி பணிய மாட்டார்.. பிரபல பாடகி மேரி மில்பன் அதிரடி கருத்து! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நாட்டை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மோடி பணிய மாட்டார்.. பிரபல பாடகி மேரி மில்பன் அதிரடி கருத்து! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 14, 2026 4:27 PM IST

ஆப்பிரிக்க-அமெரிக்கப் பாடகியான மேரி மில்பன், 2023 இல் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடி கவனத்தை ஈர்த்தவர்

News18
News18

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி மேரி மில்பன் (Mary Millben), பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு எதிராகச் செயல்படும் அமெரிக்க நன்கொடையாளர்கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் பிரதமர் மோடியை எதிர்ப்பவர்கள், இந்தியாவில் அபிஜித் தீப்கே (Abhijeet Dipke) மற்றும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு (Cockroach Janta Party – CJP) நிதி உதவி வழங்கி வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவில் குழப்பத்தையும் சீர்குலைவையும் ஏற்படுத்துவதற்காகவே இந்த வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள மேரி மில்பன், இந்தியாவின் இளம் தேசபக்தர்கள் அமைதியாக இருக்கக் வேண்டிய தருணம் இதுவல்ல என்று எச்சரித்துள்ளார். உலகளவில் பழமைவாதத் தலைவர்களைக் குறிவைக்கும் சில குறிப்பிட்ட வெளிநாட்டு நன்கொடையாளர்கள், அந்த நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டில் கல்வி கற்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தீவிரப்படுத்தி, குழப்பங்களை உருவாக்க நிதியுதவி அளிப்பது வாடிக்கையான ஒரு உலகளாவிய உத்தி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் நாடுகளின் வளர்ச்சிப் பணிகளையும் ஆளுகையையும் பாதிக்கச் செய்யும் நோக்கம் கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் சாதனைகளைப் புகழ்ந்துள்ள மேரி மில்பன், அவர் கடந்த 25 ஆண்டுகளாகப் பொதுவாழ்விலும், 12 ஆண்டுகளாகப் பிரதமராகவும் நாட்டுக்குச் சேவை செய்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும், தொடர்ச்சியாக மூன்று முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, அமெரிக்காவில் இருந்து உருவாகும் இதுபோன்ற சீர்குலைக்கும் சக்திகளுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டார் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்தியாவின் ஜனநாயக மாண்புகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக நாட்டின் மீதும் மண்ணின் மீதும் பற்று கொண்ட இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். காக்ரோச் ஜனதா கட்சியின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் இளம் தலைமுறை அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தைப் பேண எப்போதும் ஒரு மாற்று இயக்கம் அவசியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவின்போது இந்தியாவில் வெளிச்சத்திற்கு வந்த ஆப்பிரிக்க-அமெரிக்கப் பாடகியான மேரி மில்பன், 2023 இல் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடி கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் இவரது இந்தக் குற்றச்சாட்டுகள் தற்போது இந்திய அரசியலில் புதிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளன

Read More

Previous Post

இடியுடன் கூடிய மழை பெய்யும் | Tamilmirror Online

Next Post

சாயம் வெளுத்த AI, செமிகண்டக்டர் பங்குகள்.. அப்போ ஐடி பங்குகளுக்கு ராஜயோகம்.. TCS, Infosys-க்கு கொண்டாட்டம்!! | AI & Semiconductor Stocks Crash: Why Indian IT Giants Like TCS and Infosys Are Rallying Big

Next Post
சாயம் வெளுத்த AI, செமிகண்டக்டர் பங்குகள்.. அப்போ ஐடி பங்குகளுக்கு ராஜயோகம்.. TCS, Infosys-க்கு கொண்டாட்டம்!! | AI & Semiconductor Stocks Crash: Why Indian IT Giants Like TCS and Infosys Are Rallying Big

சாயம் வெளுத்த AI, செமிகண்டக்டர் பங்குகள்.. அப்போ ஐடி பங்குகளுக்கு ராஜயோகம்.. TCS, Infosys-க்கு கொண்டாட்டம்!! | AI & Semiconductor Stocks Crash: Why Indian IT Giants Like TCS and Infosys Are Rallying Big

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin