• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரயில் டிக்கெட் அப்டேட்: உச்சநீதிமன்ற உத்தரவால் நடைமுறைக்கு வரும் புது மாற்றம்..! பயணிகளே கவனம்..! | Rail Ticket Update: Supreme Court Orders Travel Insurance for Counter Tickets From October 27 — Passengers Can Get Up to Rs 10 Lakh Cover

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரயில் டிக்கெட் அப்டேட்: உச்சநீதிமன்ற உத்தரவால் நடைமுறைக்கு வரும் புது மாற்றம்..! பயணிகளே கவனம்..! | Rail Ticket Update: Supreme Court Orders Travel Insurance for Counter Tickets From October 27 — Passengers Can Get Up to Rs 10 Lakh Cover
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரயில் டிக்கெட் அப்டேட்: உச்சநீதிமன்ற உத்தரவால் நடைமுறைக்கு வரும் புது மாற்றம்..! பயணிகளே கவனம்..!

இந்திய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது இந்திய ரயில்வே. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்ய முக்கிய காரணம் நீண்ட தொலைவு பயணத்திற்கு கூட குறைந்த கட்டணமே போதும். இந்நிலையில் ரயில் டிக்கெட் முறையில் வரும் 27ஆம் தேதி முதல் புதிய மாற்றம் அமலுக்கு வர உள்ளது.

இந்தியாவில் ரயில் பயணம் செய்யும் சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, ரயில் நிலைய கவுன்ட்டர்களில் நேரில் வாங்கப்படும் அனைத்து ரயில் டிக்கெட்டுகளுக்கும் பயண காப்பீடு அக்டோபர் 27 முதல் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.

ரயில் டிக்கெட் அப்டேட்: உச்சநீதிமன்ற உத்தரவால் நடைமுறைக்கு வரும் புது மாற்றம்..! பயணிகளே கவனம்..!

இதுவரை ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே விருப்பத்தின் அடிப்படையில் காப்பீட்டு வசதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஆஃப்லைன் முறையில் அதாவது நேரடியாக ரயில் நிலைய கவுன்ட்டர்களில் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு காப்பீடு ஆப்ஷன் வழங்கப்படாமல் இருந்தது. இந்த புதிய உத்தரவின் மூலம், கவுன்ட்டர்களில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் இந்த காப்பீட்டு பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரயில் விபத்துகளை தடுப்பதற்கான காவச் பாதுகாப்பு அமைப்பை முழுமையாக செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் செய்வதாக தொடரப்பட்ட ஒரு வழக்கின் விசாரணையின் போதே உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக மே 11 அன்று, கவுன்ட்டர் டிக்கெட்டுகளுக்கும் காப்பீட்டை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகள் மாற்றப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

எனினும், இதில் எந்தவித அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை என அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள், அதாவது 27ஆம் தேதி முதல், அனைத்து ரயில் நிலையங்களிலும் கவுன்ட்டர் மூலம் விற்கப்படும் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் ஆன்லைன் டிக்கெட்டுகளை போலவே காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான நேரடி பொறுப்பு ரயில்வே வாரியத்திற்கு மட்டுமே உள்ளது என்றும் கூறி விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ரயில்வேயில் டிக்கெட் பதிவின் போதே இந்த காப்பீடு ஆப்ஷன் காட்டும். இதற்கு வெறும் 45 பைசா முதல் செலுத்தினாலே போது. இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துகள் மற்றும் குறிப்பிட்ட சில சம்பவங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. தற்போதைய காப்பீட்டுத் திட்டத்தின்படி எதிர்பாராத விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு நேரிட்டால் 10 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை கிடைக்கும். நிரந்த உடல் குறைபாடுக்கு 10 லட்சம் ரூபாய், காயங்களுக்கு 2 லட்சம் ரூபாய் என காப்பீடு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் எளிதில் அணுகக்கூடிய போக்குவரத்து சாதனமான ரயிலில் எதிர்பாராத விபத்துகள் நேரும் போது, குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும் இந்த காப்பீடு பயணிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மிக முக்கியமான நிதி உதவியை வழங்கும் என்பதால் மக்களிடம் இந்த உத்தரவு வரவேற்பை பெற்றுள்ளது.

Share This Article

English summary

Rail Ticket Update: Supreme Court Orders Travel Insurance for Counter Tickets From October 27 — Passengers Can Get Up to Rs 10 Lakh Cover

ரயில் டிக்கெட் அப்டேட்: உச்சநீதிமன்ற உத்தரவால் நடைமுறைக்கு வரும் புது மாற்றம்..! பயணிகளே கவனம்..! / The Supreme Court has directed Indian Railways to provide travel insurance for all train tickets bought at station counters from October 27, 2026, bringing offline bookings on par with IRCTC online bookings.

Story first published: Thursday, October 15, 2026, 8:29 [IST]

Other articles published on Oct 15, 2026

Read More

Previous Post

Ind vs WI | இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்த மேற்கிந்திய தீவுகள் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

புதின் தாக்கினால் ட்ரம்ப் பதிலடி கொடுக்க வேண்டும்: ஜெலன்ஸ்கி|‘If Putin Attacks, Trump Must Strike Back’: Zelensky’s Demand

Next Post
புதின் தாக்கினால் ட்ரம்ப் பதிலடி கொடுக்க வேண்டும்: ஜெலன்ஸ்கி|‘If Putin Attacks, Trump Must Strike Back’: Zelensky’s Demand

புதின் தாக்கினால் ட்ரம்ப் பதிலடி கொடுக்க வேண்டும்: ஜெலன்ஸ்கி|‘If Putin Attacks, Trump Must Strike Back’: Zelensky’s Demand

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin