சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களிலிருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வர்த்தக விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளைப் பாதிக்கும் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விமான சேவை நிறுவனம் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை எனவும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
வழக்கமான விமானச் சேவைகளை மீண்டும் முன்னெடுப்பதற்குப் பொருத்தமான சூழல் நிலவுவதாக மதிப்பிடப்பட்ட பின்னர் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

