• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மொழியும் இலக்கியமும்தான் நம் அடையாளம்: பினாங்கு சிறுகதைப் போட்டியில் டத்தோஸ்ரீ சுந்தராஜு உருக்கம்! | “Language and Literature Are Our True Identity”: Dato’ Seri Sundarajoo at Penang Tamil Writers Event

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மொழியும் இலக்கியமும்தான் நம் அடையாளம்: பினாங்கு சிறுகதைப் போட்டியில் டத்தோஸ்ரீ சுந்தராஜு உருக்கம்! | “Language and Literature Are Our True Identity”: Dato’ Seri Sundarajoo at Penang Tamil Writers Event
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Shyamsundar I

Time
Published: Wednesday, October 14, 2026, 13:15 [IST]

மலேசியா : மொழியும் இலக்கியமும் தான் ஒரு இனத்தின் முகவரியாகவும் அடையாளமாகவும் திகழ்கின்றன, என்று பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றாடல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு பிறை, பெர்ல் வியூ விருயின் அரங்கத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வலியுறுத்தினார்.

Malaysia

​பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் செ.குணாளன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த குறுங்கதைப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இலக்கியம், இலக்கியவாதிகள் தொடர்பாக பல்வேறு செய்திகளை கூறினார்.
​எழுத்தாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே சிறந்த சேவை என்று கூறிய டத்தோஸ்ரீ சுந்தராஜு,
​நம் தமிழ் சமூகத்திற்கு அதிகமான சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறேன். அதேவேளையில், இந்தச் சமூகத்தைச் தங்களின் எழுத்தின் வழியே படம்பிடித்துக் காட்டுபவர்கள் எழுத்தாளர்களே. எனவே, அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதையே சிறந்த சேவையாகக் கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.
​மேலும், பினாங்கு மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அதிகமான இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், அதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் பினாங்கு மாநில அரசாங்கத்தின் சார்பில் வழங்கிடத் தாம் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

Malaysia

அதேவேளையில், டாக்டர் சின்னையா, டத்தோஸ்ரீ புலவேந்திரன், டத்தோ மரியதாஸ் கோபால் போன்ற கொடை நெஞ்சங்களும் உதவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், குறுங்கதைப் போட்டியில் முதல் 5 இடங்களில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

Malaysia

​இலக்கியப் படைப்புகள் உச்சம் பெற வேண்டும்!

​முன்னதாக, சங்கத்தின் தலைவர் செ. குணாளன் தனது தலைமை உரையில், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 65 ஆண்டுகளாகப் பினாங்கில் இலக்கியச் சேவையாற்றி வருகிறது. இலக்கியம் எழுதுபவர்கள் போட்டிக்கும் வெற்றிக்கும் பரிசுக்கும் எழுதுவது ஒரு ஊக்க காரணியாக இருந்தாலும், இலக்கியம் படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எழுதுவதே மிக முக்கியம். உங்களின் இலக்கியம் உச்சத்தைப் பெறும்போது, நீங்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசைக் கூட வெல்ல முடியும் என்று குறிப்பிட்டார்.
​விழாவில், போட்டிக்கு வந்த கதைகளின் கதைக்களம் குறித்துச் சங்கத்தின் துணைத் தலைவர் திருமாமணி திருவரசு ஆய்வறிந்து விளக்கமளித்தார். சங்கத்தின் செயலாளர் ம. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

Malaysia

​இந்நிகழ்வில், சங்கத்தின் நீண்டகால உறுப்பினரான குமாரி எம். ஜெயலட்சுமிக்கு ‘இலக்கியச் செம்மல்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மேலும், பினாங்கு மாநில அரசாங்கத்திடமிருந்து ‘டத்தோ’ விருது பெற்ற முன்னாள் தலைமையாசிரியர் வீராசாமி அண்ணாமலைக்குச் சிறப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
​இவ்விழாவில் பேராசிரியர் டாக்டர் அஜேந்திரன் ஆறுமுகம், மேஜர் அட்ணன், ஐ.பி.எஃப் குமரேசன், பினாங்கு கல்வி இலாகாவின் லோகநாதன் மணியம், டத்தோ கரு. இராஜமாணிக்கம், மு.வி. மதியழகன் ஆகியோருடன் 200-க்கும் மேற்பட்ட அரசு சாரா இயக்கங்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

​வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்.

​முதல் 15 வெற்றியாளர்கள் (கதைத் தலைப்பு – எழுத்தாளர் பெயர்):
​ஸ்ரீபாதம் – ராமு ராஜனோரன்
​காத்திருப்பின் பெயர் ஊர்மிளை – காந்தாரம் லோகநாதன்
​கடைசித் திருவிழா – கலைச்செல்வன் கோணசேகரன்
​சுடும் நிலவு – ராஜேஸ்வரி சின்னதம்பி
​சரியானால்… – ராணி நாயகம் செபாஸ்டியன்
​அகல் விளக்கின் சாட்சி – ஜெவிதா பாலகிருஷ்ணன்
​போர்வை – ஷாலினி பெர்காஸ்
​தீக்குச்சிகள் – மதியழகன் கோவிந்தசாமி
​வடை போச்சு!!! – ஜெயந்தி கைலாசம்
​சத்தியத்தில் மறைந்த குரல் – மேனகேஸ்வரி டேவிட்
​கஞ்சித் துளி சுமந்த உடல் – தாரணி பரமசிவம்
​கலைந்த கூடாரம் – ராமராவ் ராமநாயுடு
​தாவணி கசங்கியது – தங்கவேலு சுப்ரமணியம்
​எட்டாத வானம் – சுமதி அனந்தாராவ்
​கச்சான் – ராஜேஷ் ராமசாமி
​ஆறுதல் பரிசு பெற்றவர்கள் (கதைத் தலைப்பு – எழுத்தாளர் பெயர்):
​அன்பிற்கினியாள் – திவ்யா சுப்ரமணியம்
​அன்பிற்குண்டோ அடைக்குந்தாழ்… – துளசி பாஸ்கரன்
​கிணறு – ராகு ராஜு
​காலம் சுமந்த கடிதம் – சுபாஷினி ஆறுமுகம்
​பத்தாம் பசலிகள் – அண்ணாமலை அ. சவரிமுத்து
​நட்பின் நினைவுகள் – ஜீவஸ்ரீ கணேசன்
​மனமே தொட்டாச்சிணுங்கிதானே… – முத்து எல்லப்பன்
​தெருப்பொறுக்கி – கணேஷ் சபாபதி முனுசாமி
​நிழலாடும் கனவுகள் – தனுஷா அ/பெ சண்முகம்
​விதியும் சதியும் – அஞ்சலை அப்பாசாமி
​அன்பின் அரவணைப்பு – சச்சிதானந்தம் தட்சிணாமூர்த்தி
​காலத்தின் மிச்சம் – இன்பராசி தயாநிதி
​கதை (25) – ஷர்மிளா அ/பெ லோகநாதன்
​நெஞ்சம் இணைந்த போது – குக்கீஷ் குமரகுரு

English summary

.”Language and Literature Are Our True Identity”: Dato’ Seri Sundarajoo at Penang Tamil Writers Event

Read More

Previous Post

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Next Post

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? மெட்ரோவில் சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..! | Chennai AI Startup Founder Gets 90 Seconds With PM Modi on Metro; Pitches AI Education and One-Window Government Services

Next Post
பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? மெட்ரோவில் சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..! | Chennai AI Startup Founder Gets 90 Seconds With PM Modi on Metro; Pitches AI Education and One-Window Government Services

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? மெட்ரோவில் சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..! | Chennai AI Startup Founder Gets 90 Seconds With PM Modi on Metro; Pitches AI Education and One-Window Government Services

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin