இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-ஐ (a) வகுப்புக்கு, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.
இந்தநிலையில், 2026 மே 24 அன்று இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எழுத்துப் பரீட்சையின் அடிப்படையில், தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தத்தமது நிரந்தர வதிவிட மாகாணத்திற்குரிய இணையப் பக்கத்திற்குச் சென்று, பரீட்சை வினாத்தாள் மொழிமூலம் மற்றும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாகத் தமது தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சைச் சுட்டெண்ணைப் பயன்படுத்தித் தகுதியைச் சரிபார்க்க முடியும்.
பல்கலைக்கழகங்களில் இருந்து சான்றிதழ்கள் அல்லது ஆவணங்களைப் பெற வேண்டிய விண்ணப்பதாரர்கள் 2026 ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாகாண ரீதியான இணைய இணைப்புகள்
மேல் மாகாணம்: https://moe.gov.lk/en/western-province/
மத்திய மாகாணம்: https://moe.gov.lk/en/central-province/
தென் மாகாணம்: https://moe.gov.lk/en/southern-province/
வட மாகாணம்: https://moe.gov.lk/en/northern-province/
கிழக்கு மாகாணம்: https://moe.gov.lk/en/eastern-province/
வடமேல் மாகாணம்: https://moe.gov.lk/en/north-western-province/
வடமத்திய மாகாணம்: https://moe.gov.lk/en/north-central/
ஊவா மாகாணம்: https://moe.gov.lk/en/uva-province/
சபரகமுவ மாகாணம்: https://moe.gov.lk/en/sabaragamuwa-province/
நேர்முகப் பரீட்சைகள் 2026 நவம்பர் மாதத்தில் நடைபெறும்.அழைப்புக் கடிதங்கள்: நேர்முகப் பரீட்சை நடைபெறும் இடம், திகதி மற்றும் நேரம் அடங்கிய அழைப்புக் கடிதங்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அத்துடன், 2026 ஒக்டோபர் மாத இறுதியில் கல்வி அமைச்சு மற்றும் மாகாண அரச சேவை ஆணைக்குழுக்களின் இணையத்தளங்களில் விரிவான கால அட்டவணைகள் வெளியிடப்படும் .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

