• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குருணை தொடங்கி.. எல்லா அரிசியும் விலை ஏறிடுச்சு! எந்தெந்த அரிசி.. எவ்வளவு ஏறியிருக்கு? முழு விவரம்! | Rice Prices in Tamil Nadu: Field Survey Reveals Which Varieties Went Up and by How Much

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
குருணை தொடங்கி.. எல்லா அரிசியும் விலை ஏறிடுச்சு! எந்தெந்த அரிசி.. எவ்வளவு ஏறியிருக்கு? முழு விவரம்! | Rice Prices in Tamil Nadu: Field Survey Reveals Which Varieties Went Up and by How Much
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Halley Karthik

Time
Published: Wednesday, October 14, 2026, 19:42 [IST]

திருவாரூர்: அரிசி விலை உயர்வால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், எல்லா அரிசியும் விலை ஏறவில்லை என்று அரசுக்கு ஆதரவாக பேசுபவர்கள் கூறுகிறார். உண்மை அதுவல்ல! ஒன் இந்தியா தமிழ் நடத்திய கள ஆய்வில், எந்த அரசி எவ்வளவு விலை ஏறியிருக்கிறது என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகியுள்ளன.

நம்மிடையே மன்னார்குடியிலிருந்து ராஜலட்சுமி அரசி மண்டியின் உரிமையாளர் சிவகுமார் பேசியதாவது, “எல்லா அரிசியும் விலை ஏறி இருக்கு. விலை ஏறாத அரிசி எதுவுமே இல்லை.

rice price

எந்த அரிசி எவ்வளவு விலை?

ரூ. 40க்கு விற்ற கல்சர் அரிசி இன்றைக்கு ரூ.52-55, சாதாரண பொன்னி முன்பு ரூ.50க்கு விற்பனையானது. இது இப்போது ரூ.65க்கு விற்பனையாகிறது. ரூ.65க்கு விற்ற பொன்னி இன்னைக்கு ரூ.75க்கு விற்கப்படுகிறது. கர்நாடகா பொன்னி தான் அதிகமான விலைக்கு ஏறி இருக்கு. கர்நாடகா பொன்னி ஒரு கிலோ 22 ரூபாயிலிருந்து 30 ஏறி இருக்கு. நாம ஊர் மக்கள் எல்லாம் ரொம்ப விருப்பப்படுவது கர்நாடக பொன்னிதான். பொதுவாவே கர்நாடகா பொன்னியங்கறது ஸ்டீம் ரைஸ்.

நம்மூர் அரிசி vs கர்நாடக அரிசி

நம்ம ஊர் மணச்சநல்லூர், விழுப்புரம், காஞ்சிபுரம், காங்கேயம், வெள்ளைகோவில், தாராபுரம் இங்க இருந்து வர்ற அரிசி எல்லாம், ஒரு நாள் தண்ணில ஊற வச்சு.. அதுக்கு பிறகு அவிச்சு, காய வச்சு அரைச்சு அனுப்பப்படுது.

அரிசி அதிகபட்சமா ரூ.90 வரைக்கும் விற்கப்படுகிறது. ரூ.52க்கும் அரிசி இருக்கு. ஆனால், அது புது நெல்லு, புது அரிசி. சீக்கிரமா குலைந்து போயிடும். தண்ணி விட்டு போயிடும். குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு சாப்பாடு கட்டி அனுப்ப முடியாது. அதனால ரூ. 65 ரூபாய்க்கு மேல வாங்கினால்தான் நல்லா இருக்கும். ரூ.75 அரிசிங்கறது ரெகுலரா மணச்சநல்லூர்ல இருந்து வந்துட்டு இருக்குது. நல்ல அரிசி எனில் இதுதான்.

குருணை கூட விலை ஏறிடுச்சு

வெறும் குருணையும் எடுத்துக்கிட்டா கூட.. ரூ.38 இருந்துச்சு, இப்போ ரூ.40க்கு விலை ஏறியிருக்கு. நேற்று வரை ரூ.75க்கு விற்கப்பட்ட அரிசி, இன்னைக்கு ரூ.80 சொல்றாங்க. அதுவுமே கூட கேட்ட உடன் கிடைப்பதில்லை. அரிசி இல்லை என்று சொல்கிறார்கள். வரணும்.. வந்த பிறகு சொல்றேன் என்கிறார்கள். இப்படியாக 4 நாட்களுக்கு முன்னரே பணத்தை அனுப்பினால்தான், 4 நாட்களுக்கு பிறகு அரசி வந்து சேர்கிறது. அவர்கள் சொல்லும் விலைக்குதான் நாங்கள் வாங்க வேண்டி உள்ளது.

அரிசியே இல்லையாம்!

முந்தாநேத்து.. ரூ.1,500, 1,750 சொன்னீங்களே.. இன்னைக் ரூ.1,850 சொல்கிறீர்களா! என கேட்டால்.. நாங்க என்ன செய்யுறது? என திரும்ப கேட்கிறார்கள். இன்னைக்கு ரூ.1,800 வரை விற்கப்பட்ட அரிசி, நாளைக்கு ரூ.1,900 என உயரும் என்கிறார்கள். அதுவும் நாளைக்கு உடனே அரிசி கிடைக்காது என்கிறார்கள். அரிசி விலை கடுமையா ஏறுது. மில்லுக்காரவங்க கிட்ட கேட்டோம்.. கர்நாடகாவில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்தும் வெளிநாட்டுக்கு 6 மாச காலமா அரிசி ஏற்றுமதி போயிட்டு இருக்காம். அந்த ஏற்றுமதியை நிப்பாட்டங்கனா.. இங்கே எல்லா அரிசியும் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கு. ரொம்ப குறையாது.. ஒரு ரூ.5 குறையறதுக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னு சொல்றாங்க” என்று நிலவரத்தை விவரமாக கூறியிருக்கிறார்.

English summary

rice price: The people of Tamil Nadu have been severely affected by the rise in rice prices. However, those who support the government claim that the prices of all rice varieties have not increased. That is not the truth! A field survey conducted by OneIndia Tamil has revealed comprehensive details regarding exactly which rice varieties have seen price hikes and by how much.

Read More

Previous Post

இலங்கையில் அதிகரிக்கும் HIV தொற்று! 7 ஆண்களுக்கு ஒரு பெண் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post

IPL Player Trade : மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு திரும்பிய நடராஜன்.. டெல்லிக்கு ஜீஷான் அன்சாரி மாற்றம் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL Player Trade : மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு திரும்பிய நடராஜன்.. டெல்லிக்கு ஜீஷான் அன்சாரி மாற்றம் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL Player Trade : மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு திரும்பிய நடராஜன்.. டெல்லிக்கு ஜீஷான் அன்சாரி மாற்றம் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin