வீடு மாமனார்-மாமியார் பெயரில் இருப்பதாலேயே, எல்லாச் சூழல்களிலும் மருமகளை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட முடியும் என்று கூறிவிட முடியாது. அதே வேளையில், வீட்டில் வசிப்பதற்கான இந்த உரிமை, அந்தச் சொத்தின் மீதான உரிமை மருமகளுக்கு உண்டு என்று பொருள்படாது. குடும்பத் தகராறு தொடர்பான வழக்குகளில், சூழ்நிலை, உறவுமுறை மற்றும் வீட்டின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நீதிமன்றம் பரிசீலிக்கக்கூடும். இத்தகைய சூழல்களில், மருமகளின் வசிப்பிட உரிமையையும், வயதான மாமனார்-மாமியாரின் அமைதி மற்றும் சொத்துரிமையையும் சமநிலையில் பேண வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.


