• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உச்சபட்ச விலைக்கு மின்சாரத்தை வாங்கும் தமிழ்நாடு அரசு..!! எந்த மாநிலமும் எடுக்காத ஒரு முடிவு.!! | Tamil Nadu Buys Power at Record ₹37 Per Unit as October Demand Crosses 20,000 MW

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
உச்சபட்ச விலைக்கு மின்சாரத்தை வாங்கும் தமிழ்நாடு அரசு..!! எந்த மாநிலமும் எடுக்காத ஒரு முடிவு.!! | Tamil Nadu Buys Power at Record ₹37 Per Unit as October Demand Crosses 20,000 MW
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உச்சபட்ச விலைக்கு மின்சாரத்தை வாங்கும் தமிழ்நாடு அரசு..!! எந்த மாநிலமும் எடுக்காத ஒரு முடிவு.!!

தமிழ்நாட்டில் அக்டோபர் மாத மின் தேவையை சமாளிக்கவும் மின் பற்றாக்குறையை போக்கவும் தமிழ்நாடு மின் விநியோக கழகமான TNPDCL இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே மக்கள் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக புகார் கூறி வருகின்றனர். இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது.

உச்சபட்ச விலைக்கு மின்சாரத்தை வாங்கும் தமிழ்நாடு அரசு..!! எந்த மாநிலமும் எடுக்காத ஒரு முடிவு.!!

தமிழ்நாட்டில் இந்த அக்டோபர் மாதத்தில் மின் தேவை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உச்சபட்ச மின் தேவை சுமார் 17,000 மெகாவாட்டாக இருந்தது. ஒட்டுமொத்த தினசரி மின் நுகர்வு சுமார் 365 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் அக்டோபர் தொடக்கத்திலேயே உச்சபட்ச மின் தேவையானது தொடர்ந்து 20,000 மெகாவாட்டை தொட்டு வருகிறது. மேலும், தினசரி மின் நுகர்வானது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 70 மில்லியன் யூனிட்டுகள் கூடுதலாக உள்ளது என மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

வடகிழக்கு பருவ மழை எப்போது தொடங்கும் என தெரியவில்லை, அதுமட்டுமில்லாமல் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது என கூறும் மின்வாரிய அதிகாரிகள், மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் தங்களின் வருடாந்திர பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதால், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வர வேண்டிய சுமார் 4,000 மெகாவாட் மின்சாரத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இந்த இரண்டு காரணங்களால் தான் அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

அக்டோபர் 12 முதல் 31 வரை நாள்தோறும் 1500 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டின் விலை 31 ரூபாய் முதல் 34 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இணையதளம் வாயிலாகவே தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்து இவ்வளவு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது. வேறு எந்த மாநிலமும் இவ்வளவு தொகை கொடுத்து மின்சாரம் வாங்க வில்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது.

பாரம்பரிய நிலக்கரி ஆலைகளுக்கு பதிலாக இந்த முறை எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிடம் இருந்து மின்சாரம் வாங்குவதாக கூறும் அதிகாரிகள் இதில் உள்ள ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால், நாம் முழு ஒப்பந்த தொகைக்கும் பணம் செலுத்த தேவையில்லை, எந்த அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறோமோ அதற்கு மட்டும்தான் பணம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.இதனால் ஒப்பந்தம் எந்த அளவுக்கு போடப்பட்டிருந்தாலும் நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்கின்றனர்.

Share This Article

English summary

Tamil Nadu Buys Power at Record ₹37 Per Unit as October Demand Crosses 20,000 MW

அதிகரிக்கும் மின் தேவை: எப்போதும் இல்லாத உச்சபட்ச விலைக்கு மின்சாரத்தை வாங்கும் தமிழ்நாடு அரசு..!!/ Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) has signed emergency short-term agreements to buy 1,500 MW of round-the-clock electricity from October 12 to 31 at ₹31.99–₹34.49 per unit

Story first published: Tuesday, October 13, 2026, 9:31 [IST]

Other articles published on Oct 13, 2026

Read More

Previous Post

போப்பாண்டவர் லியோவிற்கு புற்றுநோய்.. நுரையீரலின் ஒருபகுதி அறுவை சிகிச்சையில் அகற்றம் | Pope Leo diagnosed with Cancer and lobe oflung removed by operation, says vatican

Next Post

DECODE | சவுதி இளவரசரைக் குறிவைக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள்… அரண்மனையை சூழ்ந்த ஆபத்து!

Next Post
DECODE | சவுதி இளவரசரைக் குறிவைக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள்… அரண்மனையை சூழ்ந்த ஆபத்து!

DECODE | சவுதி இளவரசரைக் குறிவைக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள்... அரண்மனையை சூழ்ந்த ஆபத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin