20 ஆண்டுகள் கால அளவு கொண்ட பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, வயதுக்கு ஏற்ப பிரீமியம் தொகை மாறுபடுகிறது. ‘நிலையான காப்பீட்டுத் தொகை’ (level sum assured) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, 20 வயதுடைய ஒருவர் ஆண்டுக்கு ரூ. 7,047 பிரீமியம் செலுத்த வேண்டும். 30 வயதுடையவருக்கு ஆண்டு பிரீமியம் ரூ. 9,135 ஆகவும், 40 வயதுடையவருக்கு ரூ. 17,889 ஆகவும் இருக்கும். அதேவேளையில், ‘அதிகரிக்கும் காப்பீட்டுத் தொகை’ (increased sum assured) விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், 20 வயதுடையவருக்கு ஆண்டு பிரீமியம் ரூ. 9,345-ஆகவும், 30 வயதுடையவருக்கு ரூ. 13,083-ஆகவும், 40 வயதுடையவருக்கு ரூ. 27,846-ஆகவும் இருக்கும். இந்த உதாரணங்களில், ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. வயதுக்கேற்ப பிரீமியம் மாறுபடுகிறது என்பதை இத்தகவல்கள் உணர்த்துகின்றன. ‘அதிகரிக்கும் காப்பீட்டுத் தொகை’ விருப்பத்தில் பிரீமியம் அதிகமாக இருந்தாலும், பாலிசி விதிமுறைகளின்படி காப்பீட்டுத் தொகையானது காலப்போக்கில் அதிகரிக்கிறது.


