இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், சாமர சம்பத் தசநாயக்க திங்கட்கிழமை (12) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


