கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகவத்த ரயில் பாதைக்கு அருகிலுள்ள குடிசை வீடுகள் வரிசையில் செவ்வாய்க்கிழமை (13) ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 குடிசை வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த குடிசை வீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன. பிற்பகல் 2.30 மணியளவில் தீ பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தீ விபத்தில் வீடுகள் சேதமடைந்துள்ள போதிலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், கொழும்பு தீயணைப்புப் பிரிவின் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.



