“சீவரத்திற்கு நீதி; கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலை” என்ற தொனிப்பொருளில் கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை, செவ்வாய்க்கிழமை (13) காலை 9.30 மணியளவில் வரக்காபொல நகரிலிருந்து நிட்டம்புவ நகரை வந்தடைந்தது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் அமைந்துள்ள வணக்கத்திற்குரிய வாரியபொல சுமங்கல தேரரின் சிலைக்கு அருகில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமான இந்தப் பாதயாத்திரையின் நான்காவது நாளான இன்று, பிக்குகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.


