• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.30,000 கோடிக்கு மேல் நிதி திரட்ட திட்டம்.. முதலீட்டாளர்களின் பெரும் எதிர்பார்ப்பில் ஜியோவின் மெகா ஐபிஓ! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.30,000 கோடிக்கு மேல் நிதி திரட்ட திட்டம்.. முதலீட்டாளர்களின் பெரும் எதிர்பார்ப்பில் ஜியோவின் மெகா ஐபிஓ! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 13, 2026 7:09 PM IST

2026 ஜூன் மாத நிலவரப்படி, ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 53.3 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 28.5 கோடி பேர் 5ஜி சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

ஜியோ ஐபிஓ
ஜியோ ஐபிஓ

இந்திய பங்குச்சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவான ‘ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்’ (Jio Platforms) நிறுவனத்தின் ஆரம்பப் பொதுப் பங்கீட்டு (IPO) வெளியீடு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் (SEBI) இருந்து கடந்த ஆகஸ்ட் மாதமே ‘ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்’ ஒப்புதல் பெற்றுள்ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் ரூ.10 மதிப்பு கொண்ட சுமார் 27 கோடி புதிய பங்குகளை இந்த ஐபிஓ மூலம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதில் சலுகை விற்பனை (Offer For Sale – OFS) எதுவும் இல்லை, அதாவது தற்போதைய பங்குதாரர்கள் தங்களது பங்குகளை விற்கப்போவதில்லை.

இந்த ஐபிஓ மூலம் சுமார் ரூ. 30,200 கோடி நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில், 2024-இல் ஹூண்டாய் மோட்டார் இந்தியா திரட்டிய ரூ. 27,870 கோடியைத் தாண்டி, இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வாக இது உருவெடுக்கும். இதன் மூலம் சந்தை மூலதனத்தில் ரூ. 10 லட்சம் கோடியைத் தாண்டிய நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல் மற்றும் எச்டிஎஃப்சி வங்கியுடன் ஜியோவும் இணையவுள்ளது.

ஜியோ ஐபிஓ வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சந்தா செலுத்துவதற்காகத் திறக்கப்பட்டு, அக்டோபர் 28-ஆம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியில் சுமார் ரூ. 27,500 கோடி வரை, ஜியோவின் முக்கிய துணை நிறுவனமான ‘ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம்’ பெற்றுள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் நிறுவனத்தின் வட்டிச் செலவுகள் குறைந்து, பைனான்ஸ் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும்.

2025-26 நிதியாண்டில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் ரூ. 1,46,885 கோடி வருவாயும், ரூ. 30,049 கோடி நிகர லாபமும் ஈட்டியுள்ளது. மேலும், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நிறுவனத்தின் வருவாய் 11.8% உயர்ந்து ரூ. 39,173 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 7,764 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

2026 ஜூன் மாத நிலவரப்படி, ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 53.3 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 28.5 கோடி பேர் 5ஜி சேவையைப் பயன்படுத்துகின்றனர். ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் (ARPU) ரூ. 215.6 ஆக உயர்ந்துள்ளதுடன், ஒரு பயனர் மாதத்திற்குச் சராசரியாக 43.7 ஜிபி தரவைச் (Data) செலவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

கங்குலி வார்த்தைக்கு மரியாதை.. வந்துட்டாரு யுவராஜ் சிங்.. டெல்லி பேட்டிங் இனி தாறுமாறா இருக்கும்! | Yuvraj Singh appointed as the batting and Assistant coach of the Delhi Capitals under Sourav Ganguly

Next Post

முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த “ஸ்பைடர்மேன்” பட நடிகர்… | Makkal Osai

Next Post
முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த “ஸ்பைடர்மேன்” பட நடிகர்… | Makkal Osai

முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த “ஸ்பைடர்மேன்” பட நடிகர்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin