• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நீட் தேர்வு வினாத்தாள்களை இனி AI தான் உருவாக்க போகுதா? நந்தன் நீலகேனி கொடுத்த அப்டேட்!! | NEET Exam Reform: Nandan Nilekani Proposes AI-Generated Question Papers on Exam Day to Stop Paper Leaks

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நீட் தேர்வு வினாத்தாள்களை இனி AI தான் உருவாக்க போகுதா? நந்தன் நீலகேனி கொடுத்த அப்டேட்!! | NEET Exam Reform: Nandan Nilekani Proposes AI-Generated Question Papers on Exam Day to Stop Paper Leaks
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நீட் தேர்வு வினாத்தாள்களை இனி AI தான் உருவாக்க போகுதா? நந்தன் நீலகேனி கொடுத்த அப்டேட்!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தை தொடர்ந்து நாட்டின் தேர்வு முறைகளில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக மத்திய அரசு இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் குழு அமைத்தது. இந்நிலையில் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், நந்தன் நிலேகனி முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

நடப்பாண்டு நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் இரண்டாவது முறையாக நீட் தேர்வினை எழுதினர். இதனை அடுத்து இளைஞர்கள் போராட்டம் நடந்து கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். நாட்டின் தேர்வு முறைகளீல் சீர்த்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் குழு அமைத்தது. இந்த குழு நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் தலையெழுத்தையே மாற்ற போகும் முடிவினை எடுக்க உள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள்களை இனி AI தான் உருவாக்க போகுதா? நந்தன் நீலகேனி கொடுத்த அப்டேட்!!

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ப்ளூபர்க் பொருளாதார மாநாட்டில் பேசிய நந்தன் நீலகேனி, இந்தியாவின் தற்போதைய தேர்வு முறையில் செய்யப்பட வேண்டிய முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து உரையாடினார். பாரம்பரியமான முறையில் முன்கூட்டியே தயாரிக்கப்படும் வினாத்தாள் முறையை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நீலகேனி, முன்கூட்டியே வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும்போதுதான் அவற்றை விற்று பணம் பார்க்கும் முறைகேடுகள் உருவாகின்றன என்றார்.

இதற்கு மாற்றாக, மிகப்பெரிய அளவில் வினா வங்கி ஒன்றை தயார் செய்ய வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தேர்வு நடைபெறும் அன்றைய தினம் கடைசி நிமிடத்தில் அந்த வினா வங்கியிலிருந்து வினாத்தாள் உருவாக்கப்பட வேண்டும் என யோசனை கூறினார்.

இதன் மூலம், முன்கூட்டியே வினாத்தாள் கசிவதற்கான வாய்ப்பும், முறைகேடுகளும் முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்றார். மேலும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை தடுக்க, இந்தியாவில் உள்ள அனைத்து தேர்வுகளையும் கணினி வழி தேர்வுகளாக மாற்றுவதற்கு நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ரம்பரிய முறையில் காகித வினாத்தாள்களை நம்பியிருப்பதை விடுத்து, மாணவர்கள் கணினி மூலமாக தேர்வு மையங்களில் தேர்வெழுதும் முறைக்கு முழுமையாக மாற வேண்டும் என்றார்.

தற்போது இந்தியாவில் இளைஞர்கள் கணினி வழி தேர்வுகளை எழுதுவதற்காக 150,000 மையங்கள் ஏற்கனவே உள்ளன என்றும், அனைத்து பகுதி மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இந்த மையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் நமது தேர்வு முறையில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் என குறிப்பிட்டார். இந்தியாவில் அடிக்கடி நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி புகார்கள் எழுகின்றன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க, முன்கூட்டியே வினாத்தாள் அச்சிடப்படும் முறைக்கு விடை கொடுத்துவிட்டு, ஏஐ தொழில்நுட்பம் மூலம் தேர்வு நாளன்று கடைசி நிமிடத்தில் வினாத்தாள் தயாரிக்கும் முறையையும், நாடு முழுவதும் கணினி வழி தேர்வு மையங்களை விரிவுபடுத்துவதையும் ஒரு தீர்வாக நந்தன் நீலகேனி முன் வைத்துள்ளார்.

Share This Article

English summary

NEET Exam Reform: Nandan Nilekani Proposes AI-Generated Question Papers on Exam Day to Stop Paper Leaks

நீட் தேர்வு வினாத்தாள்களை இனி AI தான் உருவாக்க போகுதா? நந்தன் நீலகேனி கொடுத்த அப்டேட்!!/ Infosys co-founder and government exam-reforms task force Chief Nandan Nilekani has proposed using artificial intelligence to generate question papers at the last minute from a massive question bank, rather than printing them in advance.

Story first published: Tuesday, October 13, 2026, 16:31 [IST]

Other articles published on Oct 13, 2026

Read More

Previous Post

இந்தியாவில் ஸ்டார்லிங்க் அனுமதி தாமதமாவது ஏன்? சட்டவிரோதப் பயன்பாடும் அரசின் பாதுகாப்பு விதிகளும்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மலாய் முஸ்லிம்களைத் திருமணம் செய்வதால் வெளிநாட்டினரின் இனம் மாறாது என்கிறார் சைபுதீன் – Malaysiakini

Next Post

மலாய் முஸ்லிம்களைத் திருமணம் செய்வதால் வெளிநாட்டினரின் இனம் மாறாது என்கிறார் சைபுதீன் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin