போப் லியோ, நுரையீரலில் கண்டறியப்பட்ட சிறிய முடிச்சை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்காக ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
71 வயதான போப்பின் நுரையீரலில் கண்டறியப்பட்ட குறித்த முடிச்சை ஆரம்பக் கட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 மே மாதம் போப்பாகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.


