• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முன்னாள் இலங்கை அதிபர், சர்வாதிகாரி ராஜபக்சே.. ஐசியுவில் அனுமதி! நிலைமை மோசம் | Sri Lanka’s Former President Mahinda Rajapaksa hospitalized and Admitted to ICU, Party Confirms

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
முன்னாள் இலங்கை அதிபர், சர்வாதிகாரி ராஜபக்சே.. ஐசியுவில் அனுமதி! நிலைமை மோசம் | Sri Lanka’s Former President Mahinda Rajapaksa hospitalized and Admitted to ICU, Party Confirms
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Updated: Tuesday, October 13, 2026, 15:09 [IST]

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பதாக அவரது இலங்கை பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

80 வயதான மகிந்த ராஜபக்சே நேற்று திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இலங்கை பொதுஜன பெரமுன உறுதி செய்துள்ளது. அதேநேரம் அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Mahinda Rajapaksa hospitalized Sri lanka

மருத்துவமனையில் அனுமதி

மகிந்த ராஜபக்சே 2005 முதல் 2015 வரை இலங்கையின் அதிபராகப் பதவி வகித்தார். பின்னர் பிரதமராகவும் இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் தான் ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தது. 2009ஆம் ஆண்டு இலங்கை அரசுப் படைகள் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தனர். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல்கள், தமிழர்கள் கொல்லப்பட்டது, பொதுமக்கள் பாதிக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

உள்நாட்டு போர்

அப்போது பல போர் விதிகள் மீறப்பட்டன. அப்பாவி பொதுமக்கள் குவியல் குவியலாக கொல்லப்பட்டனர். சர்வதேச அளவில் கண்டங்கள் வந்தாலும் கூட அதை இலங்கை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்த போரை நடத்தியவர் அந்த காலகட்டத்தில் இலங்கை அரசின் தலைமை பொறுப்பில் இருந்த மகிந்த ராஜபக்சே. போர்க்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது தொடர்ந்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இப்போது அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சூழலில் தான் அவரது உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

செம்மணி கண்ணீர், பாகம் 2: மனித புதைகுழி உள்ளே.. மனித குலம் காணாத கொடூர காட்சிகள்!

செம்மணி கண்ணீர், பாகம் 2: மனித புதைகுழி உள்ளே.. மனித குலம் காணாத கொடூர காட்சிகள்!

நிதி முறைகேடுகள்

இதற்கிடையே மகிந்த ராஜபக்சேவின் குடும்பத்தினருடன் தொடர்புடைய நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே, நிதி முறைகேடு தொடர்பான விசாரணையில் செப்டம்பர் மாதம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மகிந்த ராஜபக்சேவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சேவும், அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் இன்னொரு வழக்கில் கடந்த வாரம் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு சரிந்தது. இலங்கையில் அவர்கள் பிம்பம் உடைந்து, பெரும் பின்னடைவை சந்தித்தது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நிர்வாகம் மீதான அதிருப்தி காரணமாக வெடித்த மக்கள் போராட்டங்களால், அப்போதைய அதிபரும் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சே பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.

கம்பி எண்ணுகிறார்கள்

உள்நாட்டு போர் நடந்த போது ராஜபக்சே பொறுப்பில்லாமல் இஷ்டத்திற்கு கடன் வாங்கியதே பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு தள்ளியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே 2024ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி, முந்தைய அரசுகளின் ஊழல் மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. அதன்படியே இப்போது ராஜபக்சேவின் குடும்பத்தினரும் கட்சியினரும் வரிசையாக சிறையில் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

English summary

Former Sri Lankan President Mahinda Rajapaksa, has been admitted to a hospital and is receiving treatment in ICU(இலங்கையின் ராஜபக்சே மருத்துவமனையில் அனுமதி): Mahinda Rajapaksa hospitalized latest news in tamil.

Read More

Previous Post

நான்காவது நாளாக தொடரும் ஞானசார தேரருக்கான விடுதலை கோரும் பேரணி

Next Post

ஜப்பானில் 5 கிலோ கொக்கெய்னுடன் 5 மலேசியர்கள் கைது – Malaysiakini

Next Post

ஜப்பானில் 5 கிலோ கொக்கெய்னுடன் 5 மலேசியர்கள் கைது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin