தங்க நகை வாங்கத் திட்டமிடுவோருக்கு ஷாக்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தங்கம் விலை..!
தங்கம் விலை கடந்த 45 நாட்களாகக் குறைந்து வந்த நிலையில் சாமானிய மக்கள் பலர் தங்கம் நகை வாங்க நகைக் கடைக்குச் சென்று வரும் வேளையில் அனைத்து தரப்பினருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் தங்கம் விலை உயரத் துவங்கியுள்ளது.
சர்வதேசச் சந்தையில் டீசல் பிரச்சனையைச் சரி செய்ய அமெரிக்கா ரஷ்யா உடன் ஒப்பந்தம் செய்திருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் விலை வேகமாகக் குறையத் துவங்கியுள்ளது. இதேபோல் டாலர் ஆதிக்கமும் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது, குறிப்பாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆர்பிஐ-யின் நடவடிக்கையின் காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது.

இவை அனைத்தையும் விட முக்கியமாக அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஏற்கனவே 2 முறை வட்டி விகிதத்தை உயர்த்திருக்கும் வேளையில் இந்த மாதம் நடக்க இருக்கும் பெட் கூட்டத்தில் வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது.
மேலும் இந்த வார இறுதியில் அமெரிக்காவின் பணவீக்கம் தொடர்பான தரவுகள் வெளியாகும் காரணத்தால் வட்டி விகிதம் உயர்வு குறித்துத் தெளிவான விளக்கம் கிடைக்க உள்ளது. இப்படி பல தரப்பட்ட காரணத்தால் சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு டிராய் ஆவுன்ஸ் தங்கம் விலை 0.32 சதவீதம் வரையில் உயர்ந்து 4,185.88 டாலராக உள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 39 ரூபாய் குறைந்து 14,929 ரூபாயாக உள்ளது, இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 35 ரூபாய் குறைந்து 13,685 ரூபாயாகவும், 18 கேரட் தங்கம் விலை 30 ரூபாய் குறைந்து 11,240 ரூபாயாக உள்ளது.
இந்திய ரீடைல் சந்தையில் சர்வதேச சந்தைக்கு இணையான மாற்றம் எதிரொலிக்கவில்லை, ஆனால் நாளைய வர்த்தகத்தில் இந்த விலை உயர்வு எதிரொலிக்கும் என கணிக்கப்படுகிறது.
இதனால் நகை கடையில் அதிகரித்துள்ள கூட்டம் மெல்ல மெல்ல குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏற்கனவே முதலீட்டாளர்கள் தங்கம் விலை எப்போது குறையும் என எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் அக்டோபர் மாத அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த முடிவு முதலீட்டு சந்தையை தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

