• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.1.80 லட்சம் கோடி வேல்யூ.. டிவிஎஸ் சாம்ராஜ்யத்தில் வெடிக்கும் குழப்பங்கள்.. மனைவி, மகள் விளக்கம்! | TVS Family Dispute: Mallika Srinivasan and Lakshmi Venu Say No Agreement Yet on Wealth Division

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரூ.1.80 லட்சம் கோடி வேல்யூ.. டிவிஎஸ் சாம்ராஜ்யத்தில் வெடிக்கும் குழப்பங்கள்.. மனைவி, மகள் விளக்கம்! | TVS Family Dispute: Mallika Srinivasan and Lakshmi Venu Say No Agreement Yet on Wealth Division
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Vigneshkumar

Time
Updated: Tuesday, October 13, 2026, 12:42 [IST]

சென்னை: டிஎவிஎஸ் குழுமத்தின் உரிமையாளர் தொழிலதிபர் வேணு சீனிவாசன் குடும்பத்தில் சொத்துரிமை மற்றும் நிறுவனங்களை பிரிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான டிவிஎஸ் சாம்ராஜ்யம் தொடர்பானது என்பதால் இது கவனம் ஈர்ப்பதாக இருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்று அவரது மனைவி மல்லிகா சீனிவாசன் மற்றும் மகள் லட்சுமி வேணு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மிக முக்கியமான தொழில் குழுமங்களில் ஒன்று தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ். மோட்டர் சந்தையில் நாட்டிலேயே முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக டிவிஎஸ் இருக்கிறது. டிவிஎஸ் குழுமம் என்பது டி.வி.சுந்தரம் ஐயங்காரால் தொடங்கப்பட்ட நூற்றாண்டு பழமையான தொழில் குழுமமாகும். ஆட்டோமொபைல், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட துறைகளில் டிவிஎஸ் செயல்பட்டு வருகிறது.

TVS Family Dispute TVS

டிவிஎஸ்

இந்த டிவிஎஸ் நிறுவனத்தில் தான் கடந்த சில காலமாகவே சில சிக்கல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையே டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் தலைவராக இருந்த வேணு சீனிவாசன், குடும்பத்தில் நிலவும் சிக்கல் குறித்து இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். நிர்வாக பொறுப்புகளை யாருக்கு வழங்குவது என்பதிலேயே பிரதான குழப்பம் என கூறப்பட்ட நிலையில், அதை அவர்கள் மறுத்துள்ளனர்.

அதாவது நிர்வாக பொறுப்புகளை யாருக்கு வழங்குவது என்பது இந்த பிரச்சினையின் மையம் அல்ல என்றும் குடும்பத்தின் பொருளாதார உரிமைகள் எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய கேள்வி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னணி

கடந்த 2020ஆம் ஆண்டு நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான இழப்பீடுகள் தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் டிவிஎஸ் குடும்பத்தின் தொழில் நிறுவனங்கள் வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்து தரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்குரிய தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டை முழுமையாக பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் அந்த பிரிவினை மட்டும் வேணு சீனிவாசன் குடும்பத்துக்குள் பொருளாதார உரிமைகள் முறையாக பிரிக்கப்பட்டதற்கான சான்றாகாது என்று மல்லிகா சீனிவாசனும் லட்சுமி வேணுவும் தெரிவித்துள்ளனர். சொத்துகளின் மதிப்பீடு, ஆலோசனை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பரஸ்பர ஒப்புதல் ஆகியவற்றுடன் கூடிய நடைமுறை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பிரச்சினைக்கு என்ன காரணம்!

இதற்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், வேணு சீனிவாசனின் மகனும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுதர்சன் வேணு, Significant Beneficial Owner பெயரிடப்பட்டுள்ளதாக டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து வாரிசுரிமை குறித்த விவாதம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. இந்த சூழலில் தான் மல்லிகா சீனிவாசன் மற்றும் மகள் லட்சுமி வேணு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கூட்டறிக்கை

அதில் டிவிஎஸ் குடும்ப விவகாரம் குறித்த ஊடக செய்திகள் தவறான புரிதல்களை ஏற்படுத்துவதாக இருவரும் தெரிவித்துள்ளனர். குடும்பத்துக்குள் நிலவும் பிரச்சினைகளை பொதுவெளியில் விவாதிக்காமல், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவே இதுவரை முயன்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மல்லிகா சீனிவாசன் பங்குதாரராக உள்ள டாஃபே நிறுவனம், தனியான குடும்ப தொழில் குழுமத்தை சேர்ந்தது என்றும், வேணு சீனிவாசன் குடும்பத்துக்குள் உரிமைகளை பிரிக்கும் விவகாரத்துடன் அதற்கு தொடர்பில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

டாஃபே நிறுவனத்துடனான மல்லிகா சீனிவாசனின் நீண்டகால தொடர்பையும், அந்த நிறுவனத்தில் அவர் வகிக்கும் பொறுப்பையும், வேணு சீனிவாசன் குடும்பத்தின் பொருளாதார உரிமைகள் சமமாக பிரிக்கப்பட்டதற்கான ஆதாரமாகக் காட்டுவது தவறானது என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டாஃபே நிறுவனத்துடனான மல்லிகா சீனிவாசனின் பொறுப்பு வகித்தாலும் அதற்கும் வேணு சீனிவாசன் குடும்பத்தில் சொத்துரிமை பிரிப்பதற்கும் தொடர்பு இல்லை என்பதையே சொல்ல வருகிறார்கள்.

English summary

Mallika Srinivasan and her daughter Lakshmi Venu have clarified that no agreement has been reached on dividing the economic rights(டிவிஎஸ் நிறுவனத்தில் வெடித்த குழப்பம்): TVS Family Dispute latest news in tamil.

Read More

Previous Post

பிக்குவின் ஆடையை அகற்றுவது மிகவும் மோசமான செயல் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Next Post

CM Vijay: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக பணவீக்கம்.. ஏன் இந்த மோசமான நிலை..? 3 முக்கிய காரணம்! | Inflation Shock: Tamil Nadu Records Highest Retail Inflation in India at 6.81% Driven by Food Prices

Next Post
CM Vijay: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக பணவீக்கம்.. ஏன் இந்த மோசமான நிலை..? 3 முக்கிய காரணம்! | Inflation Shock: Tamil Nadu Records Highest Retail Inflation in India at 6.81% Driven by Food Prices

CM Vijay: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக பணவீக்கம்.. ஏன் இந்த மோசமான நிலை..? 3 முக்கிய காரணம்! | Inflation Shock: Tamil Nadu Records Highest Retail Inflation in India at 6.81% Driven by Food Prices

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin