• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Terrace Gardening: சின்ன இடம் இருந்தால் போதும்… காய்கறிகளும் விளையும், மனசும் லேசாகும் | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Terrace Gardening: சின்ன இடம் இருந்தால் போதும்… காய்கறிகளும் விளையும், மனசும் லேசாகும் | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 12, 2026 12:53 PM IST

மாடித்தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளுக்குத் தேவையான இயற்கை உரங்களை வீட்டிலேயே தயாரிப்பது, செடிகளுக்குத் தண்ணீர் அளிக்கும் முறைகள், பூச்சித் தாக்குதலைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.

+

News18

News18

விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த இடத்தில் இயற்கை முறையில் காய்கறிகளைச் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாடித்தோட்டம் அமைப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் வீடுகளின் மாடிகளிலும் குறைந்த இடத்திலும் இயற்கை முறையில் காய்கறிகளைச் சாகுபடி செய்து, வீட்டிற்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே உற்பத்தி செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கோலியனூர் வட்டாரம், வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணைச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சி வகுப்பில், மாடித்தோட்டம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வது, தோட்டம் அமைப்பதற்கு ஏற்ற காலம், மாடியில் வளர்க்கக்கூடிய காய்கறிச் செடிகள் மற்றும் அவற்றைப் பராமரிக்கும் முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வீட்டின் மாடியில் கிடைக்கும் குறைந்த இடத்தையும் முறையாகப் பயன்படுத்தி, அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை எவ்வாறு பயிரிடலாம் என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

மாடித்தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளுக்குத் தேவையான இயற்கை உரங்களை வீட்டிலேயே தயாரிப்பது, செடிகளுக்குத் தண்ணீர் அளிக்கும் முறைகள், பூச்சித் தாக்குதலைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, பாரம்பரியக் காய்கறி ரகங்களைச் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம், செடிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் வழிமுறைகள் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் அரசு மானியத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சி வகுப்பு வெறும் கருத்தரங்காக மட்டுமின்றி, விவசாயிகள் நேரடியாகப் புரிந்துகொள்ளும் வகையில் செயல்விளக்கப் பயிற்சியாகவும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இலவசமாகச் செடிகளும் வழங்கப்பட்டன. குறிப்பாக, பயிற்சியில் பங்கேற்ற முன்னோடி விவசாயிகள், தாங்கள் மாடித்தோட்டம் அமைத்துப் பராமரிக்கும் முறைகள், செடிகளை வளர்ப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

செம்மணி குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் பின்லாந்து எம்.பிக்கள்!

Next Post

DECODE | Saudi vs Houthi | ரியாத்தை குறிவைக்கும் ஹூதிகள்… சவுதி மீது அடுத்தடுத்து தாக்குதல்!

Next Post
DECODE | Saudi vs Houthi | ரியாத்தை குறிவைக்கும் ஹூதிகள்… சவுதி மீது அடுத்தடுத்து தாக்குதல்!

DECODE | Saudi vs Houthi | ரியாத்தை குறிவைக்கும் ஹூதிகள்... சவுதி மீது அடுத்தடுத்து தாக்குதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin