முடங்கியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நீடித்த உடன்பாடு 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எட்டப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசக் கடன் தரவரிசை நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) இதனை தெரிவித்துள்ளது.
2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான நிலையான உடன்பாடு எட்டப்படுவதை அடிப்படையாகக் கொண்டே தங்களது பொருளாதாரக் கணிப்புகள் அமைந்துள்ளதாக ஃபிட்ச் குறிப்பிட்டுள்ளது.
நிபந்தனைகள்
இருப்பினும், இந்த ஒப்பந்தம் எந்த வடிவில் அமையும் எத்தகைய நிபந்தனைகள் சேர்க்கப்படும் அல்லது இதில் எந்தெந்த நாடுகள் நேரடியாகப் பங்கேற்கும் என்பது குறித்த தெளிவான விபரங்கள் எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரினால் வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலைகள், மீட்சியடையும் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வலுவான நிதியிருப்பு காரணமாக வளைகுடா நாடுகளின் கடன் தரவரிசை பெரியளவில் வீழ்ச்சியடையாமல் உறுதியாக நீடிக்கிறது.

அத்தோடு அமெரிக்க-ஈரான் மோதலால் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளும் ஈராக்கும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் தாக்குதல்கள் மற்றும் ஹைட்ரோகார்பன் ஏற்றுமதிக்கான முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடைகளே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

