
நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், பொஸ்பேட் ஏற்றுமதியை பிரத்தியேகமாக வழங்க மூன்று நிறுவனங்களிடமிருந்து ரூ. 8.1 மில்லியன் இலஞ்சம் பெறப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த நிறுவனங்கள் பொஸ்பேட் ஏற்றுமதிக்குத் தேவையான உரிமங்களைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சாமர சம்பத் தசநாயக்க இராஜாங்க அமைச்சராக இருந்தபோது அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாரச்சியும் இந்த விசாரணை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

