Last Updated:
ஊழல் குற்றச்சாட்டின்பேரில் ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சில காலம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது உடல்நிலையைக் பரிசோதிப்பதற்காக மருத்துவர்கள் குழு பல்வேறு அவசர மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டது. ஊழல் குற்றச்சாட்டின்பேரில் ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் அவரது குடும்பத்தினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் குவிந்து வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


