Last Updated:
டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராடத் தடை விதிக்கப்பட்டதற்கு சிபிஎம் எம்.பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் ஜந்தர் மந்தர் இனி போராட்டக் களம் கிடையாது என மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களம் எனும் அந்தஸ்தை இழந்துள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சியினர், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி வரும் நிலையில், தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் அதற்கான அனுமதியை மறுத்துவருகின்றனர்.
இந்தச் சூழலில், ஜந்தர் மந்தரை போராட்டக் களத்தில் இருந்து நீக்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். மேலும், புதிதாய் மூன்று இடங்களை போராடுவதற்கு தேர்வு செய்தும் பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில் இதற்கு சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்களை நடத்த முடியாது என டெல்லி காவல்துறை அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. அதிகாரத்தில் இருப்போருக்கும் ஆட்சி செய்வோர்க்கும் குடிமக்களின் குரல் அவர்கள் எங்கிருந்து எழுப்பினாலும் கேட்க வேண்டும்.
ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்களை நடத்த முடியாது என டெல்லி காவல்துறை அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
அதிகாரத்தில் இருப்போருக்கும் ஆட்சி செய்வோர்க்கும் குடிமக்களின் குரல் அவர்கள் எங்கிருந்து எழுப்பினாலும் கேட்க வேண்டும்.ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி மக்களின் போராடும் உரிமை நசுக்கப்படுவதைக தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் அரசியலமைப்புச் சட்டம் ஒரு குடிமகனுக்குத் தந்திருக்கும் அனைத்து உரிமைகளையும் மோடி அரசு மறுத்து வன்முறையைக் கட்டவிழ்த்தது. கிட்டத்தட்ட டெல்லி ஒரு Police State ஆகத்தான் இருந்தது.
ஜந்தர் மந்தரில் எழுப்பபடும் குரல்களுக்கே மதிப்பில்லை என்றால் அந்த இடத்தை வேறு எங்கு மாற்றினாலும் அதேநிலைதான் தொடரப்போகிறது என்பது தெளிவாகியுள்ளது
போராட்டங்களுக்காக ஏற்கெனவே அறிவிக்கை செய்யப்பட்ட இடத்தை இவ்வளவு அவசரமாக மாற்றுவது பா.ஜ.க. அரசின் அச்சத்தையே வெளிக்காட்டுகிறது.மோடி – அமித் ஷா அரசு பொதுமக்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கும் நாள், அத்தனை வன்முறைகளுக்கும் பொறுப்பேற்கும் நாள் விரைவில் வரும்!
#JantarMantar #ArrestCEC— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 12, 2026
ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி மக்களின் போராடும் உரிமை நசுக்கப்படுவதைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் அரசியலமைப்புச் சட்டம் ஒரு குடிமகனுக்குத் தந்திருக்கும் அனைத்து உரிமைகளையும் மோடி அரசு மறுத்து வன்முறையைக் கட்டவிழ்த்தது. கிட்டத்தட்ட டெல்லி ஒரு Police State ஆகத்தான் இருந்தது.
ஜந்தர் மந்தரில் எழுப்பப்படும் குரல்களுக்கே மதிப்பில்லை என்றால் அந்த இடத்தை வேறு எங்கு மாற்றினாலும் அதேநிலைதான் தொடரப்போகிறது என்பது தெளிவாகியுள்ளது. போராட்டங்களுக்காக ஏற்கெனவே அறிவிக்கை செய்யப்பட்ட இடத்தை இவ்வளவு அவசரமாக மாற்றுவது பா.ஜ.க. அரசின் அச்சத்தையே வெளிக்காட்டுகிறது.
மோடி – அமித் ஷா அரசு பொதுமக்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கும் நாள், அத்தனை வன்முறைகளுக்கும் பொறுப்பேற்கும் நாள் விரைவில் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.


