• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

TCS அப்டேட்: இந்த இரண்டு திறன்கள் இருந்தால் தான் இனி ஐடி வேலைவாய்ப்பு கிடைக்கும்..!! | TCS to Prioritise AI and Digital Skills in 80% of Future Hires

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
TCS அப்டேட்: இந்த இரண்டு திறன்கள் இருந்தால் தான் இனி ஐடி வேலைவாய்ப்பு கிடைக்கும்..!! | TCS to Prioritise AI and Digital Skills in 80% of Future Hires
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


TCS அப்டேட்: இந்த இரண்டு திறன்கள் இருந்தால் தான் இனி ஐடி வேலைவாய்ப்பு கிடைக்கும்..!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தங்கள் நிறுவனத்தின் எதிர்கால வேலைவாய்ப்புகளில் இனி குறிப்பிட்ட 2 திறன்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படும் என தெரிவித்துள்ளது. எனவே ஐடி வேலை வேண்டும் என காத்திருப்பவர்களும், கல்லூரி மாணவர்களும் கட்டாயம் இதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏஐ வருகையால் ஐடி வேலைகள் படிப்படியாக மனிதர்களிடம் இருந்து மிஷின்களிடம் செல்கின்றன. ஐடி ஊழியர்கள் மாதக்கணக்கில் செய்து வந்த கோடிங் வேலைகளை ஏஐ நொடிப்பொழுதில் முடிக்கிறது. இதனால் வேலைவாய்ப்பு சந்தையே ஸ்தம்பித்து போயுள்ளது. குறிப்பாக ஐடி வேலைகள் பணி பாதுகாப்பு அற்றவையாக மாறி வருகின்றன. இத்தகைய சூழலில் டிசிஎஸ் நிறுவனம் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளது.

TCS அப்டேட்: இந்த இரண்டு திறன்கள் இருந்தால் தான் இனி ஐடி வேலைவாய்ப்பு கிடைக்கும்..!!

இனி டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்கப்படும் புதிய பணியாளர்களில் 80 சதவீதத்தினர் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களை பெற்றவர்களாக மட்டுமே இருப்பார்கள் என அந்நிறுவன மேலதிகாரி ஒருவர் தி எக்கனாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். டிஜிட்டல் மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களில் ஆழ்ந்த அறிவு மற்றும் திறன் பெற்றவர்களாக இருப்பவர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைக்கும் , இதன் மூலம் நிறுவனத்தை எதிர்கால தொழில்நுட்ப சவால்களுக்கு தயார்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிக வருவாயில் ஏஐ சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகளின் பங்கு தற்போது 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாயில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏஐ சார்ந்த வணிகத்தின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் திறமை கொண்ட புதிய பணியாளர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம், நிறுவனத்தின் லாப வரம்பை மேலும் அதிகரிக்க முடியும் என டிசிஎஸ் தலைமை நம்புகிறதாம். இதனால் தங்களின் ஊழியர் தேர்வு முறைகளையே மாற்ற திட்டமிட்டுள்ளதாம்.

கடந்த காலாண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனம் 4,500 புதிய பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது. இதில் 25% பணியாளர்கள் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்ப துறையை சார்ந்தவர்களாக உள்ளனர். முன்னதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசன், ஏஐ திறன்களை வளர்த்துக்கொள்ளும் பொறியாளர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளும் முன்னுரிமையும் கிடைக்கும் என தெரிவித்திருந்தார்.

உலகளவில் ஏஐ அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை வேகமாக மாற்றிக்கொள்ளும் வகையில், டிஜிட்டல் மற்றும் ஏஐ துறையில் ஐடி நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. எனவே இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகும். எனவே இளைஞர்கள், பட்டதாரிகள் , ஏற்கனவே ஐடி வேலையில் இருப்பவர்கள் இதில் கவனம் செலுத்துவது நல்லது.

Share This Article

English summary

TCS to Prioritise AI and Digital Skills in 80% of Future Hires

TCS அறிவிப்பு: இந்த இரண்டு திறன்கள் இருந்தால் தான் இனி ஐடி வேலைவாய்ப்பு கிடைக்கும்..!! / Tata Consultancy Services (TCS) expects around 80% of its future recruits to have digital and AI-related skills as it shifts towards more AI-led work.

Story first published: Monday, October 12, 2026, 13:45 [IST]

Other articles published on Oct 12, 2026

Read More

Previous Post

10 ரூபாய் நாணயங்களை கொட்டி கொடுத்து பைக் வாங்கிய நபர்.. தெலங்கானாவில் சுவாரஸ்யம்.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" – ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு

Next Post
"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" – ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு

"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" - ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin