Last Updated:
ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ள துயர சம்பத்தில் இருந்து நோபாளம் முழுமையாக மீள்வதற்குள், புத்திகண்டகி நதியில் மீண்டுமொரு முறை பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் புத்திகண்டகி ஆற்றில் திடீரென சேறு கலந்து கருப்பு நிறத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் கட்டடங்களை அடித்துச் செல்லப்பட்ட காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கு பகுதியில் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் கோர்கா மாவட்டத்தின் சும்னுப்ரி கிராமம் அமைந்துள்ளது. அங்கு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் புத்திகண்டகி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், பல வீடுகள், இரண்டு தொங்கு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், ஒரு நீர்மின் நிலையம் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், 4 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Flash flooding in Nepal has swept away buildings along the Budhi Gandaki river on Sunday.
Terrified onlookers in Gorkha district filmed from higher ground, after a landslide triggered downstream flooding that also swept away a bridge and homes. https://t.co/6rWzRbFxTA— Al Jazeera English (@AJEnglish) October 11, 2026
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நேபாளத்தில் திடீரென பனிப்பாறை சரிந்து போதே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில், சிக்கி ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகினர். இந்த துயர சம்பவத்தில் இருந்து நேபாளம் முழுமையாக மீள்வதற்குள் திரிசூலி ஆற்றின் துணை நதியான புத்திகண்டகியில் தற்போது ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

