• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாகிஸ்தானில் வெடிக்கும் உள்நாட்டு போர்? எமர்ஜென்சி அறிவிப்பு! கையை பிசையும் ஷெரீப் அரசு | Pakistan Declares Emergency in Khyber Pakhtunkhwa Amid Imran Khan Protests and Rising Violence

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாகிஸ்தானில் வெடிக்கும் உள்நாட்டு போர்? எமர்ஜென்சி அறிவிப்பு! கையை பிசையும் ஷெரீப் அரசு | Pakistan Declares Emergency in Khyber Pakhtunkhwa Amid Imran Khan Protests and Rising Violence
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Published: Sunday, October 11, 2026, 17:12 [IST]

இஸ்லாமாபாத்: சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறமும் ஆயுதக் குழுக்களின் வன்முறை மறுபுறமும் அதிகரித்துள்ள சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் கிட்டத்தட்ட உள்நாட்டு போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையே இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என்று அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. அவரது பிடிஐ கட்சியினர் நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Pakistan Declares Emergency Pakistan Emergency

எமர்ஜென்சி அறிவிப்பு

பாகிஸ்தான் அரசியலமைப்பின் இரு முக்கிய சட்ட பிரிவுகளின் கீழ் இந்த அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாகாணத்தின் நிர்வாகத்தில் மத்திய அரசுக்கு விரிவான அதிகாரங்கள் கிடைக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மாகாண அரசுகளின் அதிகாரம் குறைக்கப்படும். மத்திய ஷெரீப் அரசுக்கு அதிகாரம் குவியும்.

இந்த உத்தரவில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கையெழுத்திட்டதுள்ளார். மாகாணத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதாலும் போராட்டக்காரர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.

ஏன் கைபர் பக்துன்க்வா மாகாணம்

இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் முக்கிய ஆதரவு தளமாக கைபர் பக்துன்க்வா மாகாணம் உள்ளது. அங்கு தான் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அதை ஒடுக்கும் வகையிலேயே கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மட்டும் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை கடுமையாக விமர்சித்த பிடிஐ கட்சி தலைவர் கோஹர் அலி கான், இது மிகுந்த கவலையளிக்கும் அரசியல் என்றும் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார். மக்களின் உரிமைகளுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் சாடியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக இம்ரான் கானின் ஆதரவாளர்கள் மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை அக்டோபர் 4ஆம் தேதி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்தன. இம்ரான் கானை அவரது மருத்துவர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பதும் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

இம்ரான் கான்

முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான இம்ரான் கான், 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் உள்ளார். ஊழல், தேசத்துரோகம், வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் தனது செல்வாக்கைக் குறைக்க முயற்சி நடப்பதாகவும் இம்ரான் கானும் அவரது வழக்கறிஞர்களும் மறுத்துள்ளனர்.

உள்நாட்டு போர்

இது ஒரு பக்கம் இருக்க ஆப்கானிஸ்தானின் எல்லை மாகாணமான பலூசிஸ்தானில் பலூச் போராளிகளின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இதை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் குழுக்களே காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. கடந்த பிப்ரவரியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்ட நிலையில், மார்ச் மாதத்தில் போர் நிறுத்தம் எட்டப்பட்டது. இருப்பினும், இப்போது தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது.

இப்படி ஒரு பக்கம் பாகிஸ்தானின் உள்நாட்டு குழப்பம் காரணமாக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னொரு பக்கம் பலூசிஸ்தானில் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க முடியாமல் ஷெரீப் அரசு திணறும் நிலையில், அங்கு உள்நாட்டு போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

English summary

Pakistan has declared an emergency in Khyber Pakhtunkhwa amid intensifying protests demanding the release Imran Khan(பாகிஸ்தானில் எமர்ஜென்சி அறிவிப்பு): Pakistan Declares Emergency latest news in tamil.

Read More

Previous Post

சிறையிலுள்ள பிக்குகளுக்கு காவியுடை அணிய அனுமதி

Next Post

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதம்.. கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் கேப்டன் | கிரிக்கெட் செய்திகள்

Next Post
கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதம்.. கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் கேப்டன் | கிரிக்கெட் செய்திகள்

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதம்.. கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் கேப்டன் | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin