Last Updated:
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டி20 போட்டி இந்தூரில் இன்று இரவு நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டி20 போட்டி இந்தூரில் இன்று இரவு நடைபெற உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்தியாவும், 2-ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றன. இதனால் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ள நிலையில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இன்று இரவு 7 மணிக்கு 3ஆவது டி20 போட்டி நடைபெற உள்ளது.
நடுவரிசை பேட்டிங்கில் மாற்றம் இருந்தாலும், தொடக்க வீரர்களில் மாற்றம் இருக்காது என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஏற்கனவே கூறியுள்ளார். இதனால், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயஷ் ஐயர், திலக் வர்மா என பேட்டிங் வரிசை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தூர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இந்திய அணி பந்துவீச்சை பலப்படுத்த முக்கியத்துவம் அளிக்கும் என கூறப்படுகிறது. ஷிவம் துபேவுக்குப் பதிலாக நிதிஷ் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் ரன்களை குவிக்க மேற்கிந்திய தீவுகள் அணியும் மும்முரமாக தயாராகியுள்ளது.


