ஐஐடி-யில் சேர்வதற்காக ஒவ்வொரு மாணவர்களும் கடுமையாக போராடுகிறார்கள். அதற்கு காரணம் அங்கு அவ்வளவு எளிதில் இடம் கிடைக்காது; இன்னொன்று படித்து முடித்தவுடன் மிகப்பெரிய சர்வதேச நிறுவனங்களில் பணி நியமனம் கிடைக்கும். ஆனால் சில மாணவர்கள் ஐஐடி-யில் படித்தாலும் கூட வேறு நிறுவனங்களில் வேலைக்குச் செல்லாமல் சொந்தமாக தொழில் தொடங்கி அதில் வெற்றியும் பெறுகின்றனர்.
அப்படியொருவர் தான் அனுராப் சின்கா. பீகாரை பூர்விகமாகக் கொண்ட அனுராப்பும், அவருடைய மனைவியும் சொந்தமாக லாண்டரி (துணி துவைக்கும்) தொழிலை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
ஐஐடி படிப்பை நிறைவு செய்த அனுராப் நல்ல வேலையில் வருடத்திற்கு ரூ.84 லட்சம் சம்பாதித்து வந்தார். இப்படியொரு வருமானம் கிடைக்கும்போது நாம் யாருமே அந்த வேலையை ராஜினாமா செய்ய மாட்டோம். ஆனால் அனுராப் அப்படி நினைக்கவில்லை. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. அதனால் தான் பார்த்துவந்த வேலையை கூட ராஜினாமா செய்தார்.
பீகாரின் பகல்பூரில் சிறிய வீட்டில் வளர்ந்தவர் அனுராப். சிறு வயதில் இருந்தே படிப்பில் படுசுட்டியான அனுராப், எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே ஐஐடி-யில் சேர பயிற்சி எடுத்து வந்தார். 12ம் வகுப்பை முடித்ததும் தான் ஆசைப்பட்ட மாதிரியே ஐஐடி பாம்பேவில் சேர்ந்து பயில தொடங்கினார். ஆனால் அவரது கல்லூரி கட்டணத்தை மிகவும் கஷ்டப்பட்டே அவரது குடும்பம் செலுத்தி வந்தது.
இதையும் படிக்க:
உங்களுடைய பி.எஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது?இதை செய்தால் போதும்
பொறியியல் படிப்பை நிறைவு செய்த அனுராப் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றார். 2015-ம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. அதன்பிறகே Franglobal என்ற தன்னுடைய முதல் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் இந்த நிறுவனத்தை Franchise India-விடம் விற்றுவிட்டு விருந்தோம்பல் துறையில் கால் பதிக்க விரும்பினார். 2015-ம் ஆண்டு ட்ரிபோ ஹோட்டலில் சேர்ந்தார். அங்கு பணியாற்றும்போது தான் வட இந்தியாவில் உள்ள பல்வேறு பட்ஜெட் ஹோட்டல்களின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் பொறுப்புகளை கவனித்து வந்தார் அனுராப். அப்போதுதான் லாண்டரி தொழிலுக்கும் சந்தையில் உள்ள தேவைக்கும் நிறைய இடைவெளி இருப்பதை உணர்ந்தார்.
உடனடியாக அனுராப்பும், அவரது மனைவியும் இணைந்து லாண்டரி தொழிலை தொடங்கி தரமான சேவைகளை வழங்க தயாராகினர். தான் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்த அனுராப், ரூ.20 லட்சம் முதலீடு செய்து UClean என்ற நிறுவனத்தை 2017-ம் ஆண்டு தொடங்கினார். இன்று இந்நிறுவனத்தின் மதிப்பு எவ்வுளவு தெரியுமா? ரூ.170 கோடி.
இதையும் படிக்க:
பேருந்தில் இருந்து தவறி விழுந்த பயணி… சூப்பர் ஹீரோவாக மாறிய கண்டக்டர் – வைரல் வீடியோ!
கொஞ்சம் கொஞ்சமாக UClean நிறுவனத்தை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்தார் அனுராப். அதன் ஒரு பகுதியாக ஹைதராபாத் மற்றும் புனேவில் தனது நிறுவனத்தின் கிளைகளை தொடங்கினார். இன்று UClean நிறுவனம் இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 350 கடைகளோடு இயங்கி வருகிறது. இந்தியா மட்டுமின்றி வங்காளதேசம், நேபாளம் நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன. கூடிய விரைவில் ஆஃப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் கிளைகளை தொடங்கப் போவதாக கூறியுள்ளார் அனுராப்.
.
&w=750&resize=750,375&ssl=1)
