சர்வதேசத்தின் முக்கிய வர்த்தக கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் தொடரும் பதற்றமானது சர்வதேச சந்தையின் எண்ணை விலை வரம்பில் நிலையற்ற தன்மையை உறுவாக்கியள்ளது.
இந்நிலையின் இன்றும் குறித்த வழித்தடத்தில் பயணித்த சரக்கு கப்பல்(Supertanker) வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கீகரிக்கப்படாத பாதையில் குறித்த கப்பல் பயணித்த நிலையில் இந்த வெடிப்புக்கு இலக்காகியுள்ளது.
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை
ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் வைத்து கண்ணிவெடியில் மோதியதைத் தொடர்ந்து பெரும் வெடிப்பு அடைந்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஈரானின் அரை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் பகிர்ந்த ஒரு அறிக்கையில், கச்சா எண்ணெயுடன் நீரிணையை விட்டு வெளியேற முயன்றபோது, அந்த எண்ணெய்க் கப்பல் தனது வழிசெலுத்தல் மற்றும் இருப்பிடக் கண்டறிதல் அமைப்புகளை அணைத்துவிட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் விதிகளை மீற முயற்சிக்கும் எந்தவொரு எண்ணெய்க் கப்பலின் இறுதி விளைவும் ஒரு பயங்கரமான தீ விபத்தே ஆகும், என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

