வங்கிகள் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை அதன் கஸ்டமர்களுக்கு அவ்வப்போது வெளியிடுவார்கள். சிறப்பு FD திட்டங்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் குறைவான நேரம் கொண்ட ஆஃபர்களுடன் எக்கச்சக்கமான தனித்துவமான பலன்களுடன் வரக்கூடியவை.
IDBI வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் & Sind வங்கி ஆகிய மூன்று முன்னணி வங்கிகள் வெளியிட்டுள்ள சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் புக்கிங் செய்வதற்கான கடைசி தேதி முடிய உள்ளது. இவர்களுடைய சிறப்பு FD திட்டங்கள் 8 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
இந்த சிறப்பு FDகளில் சப்ஸ்கிரைப் செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. IDBI வங்கி உட்சவ் FD, இந்தியன் வங்கி சிறப்பு FD மற்றும் பஞ்சாப் & சிந்த் வங்கி சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் ஆகிய மூன்று சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த வங்கிகள் வழங்கும் சிறப்புத் திட்டங்கள் மூலமாக சிறந்த ரிட்டன்களை பெற நினைக்கும் முதலீட்டாளர்கள் ஜூன் 30ம் தேதிக்குள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும்.
IDBI வங்கி உட்சாவ் ஃபிக்சட் டெபாசிட்கள்
300 நாட்களில் மெச்சூரிட்டியாக கூடிய இந்த சிறப்பு FD திட்டத்திற்கு IDBI வங்கி வழக்கமான கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 7.05% வட்டியையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.55% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
375 நாட்களில் மெச்சூரிட்டியாகும் FDகளுக்கு IDBI வங்கி பொது சிட்டிசன்களுக்கு ஓராண்டுக்கு 7.1% வட்டியையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.6% சதவீத வட்டியையும் கொடுக்கிறது. அடுத்தபடியாக 444 நாட்களில் மெச்சூரிட்டியாகும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொது கஸ்டமர்கள் ஓராண்டுக்கு 7.2% வட்டியையும், சீனியர் சிட்டிசன்கள் 7.7% வட்டியையும் பெறலாம். இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 30, 2024.
இதையும் படிக்க:
உங்களுடைய பி.எஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது?இதை செய்தால் போதும்
இந்தியன் வங்கி சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்
இந்தியன் வங்கி தற்போது இரண்டு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை நடத்தி வருகிறது – Ind Supreme 300 நாட்கள் மற்றும் Ind Super 400 நாட்கள்.
300 நாட்களில் மெச்சூரிட்டியாகும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வழக்கமான வாடிக்கையாளர்கள் 7.05% சதவீத வட்டியையும், அதுவே சீனியர் சிட்டிசன்கள் 7.55% சதவீத வட்டியையும் பெறலாம். இந்த வங்கி சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.80% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
400 நாட்களில் மெச்சூரிட்டியாகும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு இந்தியன் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டி விகிதத்தையும், சீனியர் சிட்டிசனுக்கு 7.75% வட்டி விகிதத்தையும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2024.
இதையும் படிக்க:
புதிய EPF விதிகள்: வங்கி பாஸ்புக் முதல் செக் புக் வரை… விதிகளை மாற்றிய EPFO!
பஞ்சாப் & சிந்த் வங்கி சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி 222 நாட்கள், 333 நாட்கள் மற்றும் 444 நாட்கள் கொண்ட மூன்று சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகிறது. 222 நாட்களில் மெச்சூரிட்டியாகும் திட்டத்திற்கு 7.05% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 333 நாட்களில் மெச்சூரிட்டியாகும் திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 7.10% வட்டி கிடைக்கிறது. 444 நாட்கள் மெச்சூரிட்டி காலம் கொண்ட சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 30.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திவரும் இன்னும் இரண்டு பிரபலமான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் அம்ரித் காலாஷ் மற்றும் SBI WeCare. எனினும், இந்த சிறப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30.
400 நாட்கள் மெச்சூரிட்டி காலம் கொண்ட அம்ரித் காலாஷ் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.10 சதவீத வட்டி கிடைக்கிறது. சீனியர் சிட்டிசன்கள் 7.60 சதவீத வட்டியை பெற்றுக் கொள்ளலாம். SBI WeCare வட்டி விகிதம் ஒரு ஆண்டுக்கு 7.50% ஆகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)