• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவுக்காக மட்டும்.. 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஷார்ஜா.. ஹார்முஸ் சிக்கலில் இருந்து விடுதலை..!! | Bypassing Strait of Hormuz: Sharjah Invests $2 Billion in Khorfakkan Port to Attract $3 Billion Indian Capital

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவுக்காக மட்டும்.. 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஷார்ஜா.. ஹார்முஸ் சிக்கலில் இருந்து விடுதலை..!! | Bypassing Strait of Hormuz: Sharjah Invests $2 Billion in Khorfakkan Port to Attract $3 Billion Indian Capital
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவுக்காக மட்டும்.. 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஷார்ஜா.. ஹார்முஸ் சிக்கலில் இருந்து விடுதலை..!!

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்தியிலான வர்த்தக உறவில் ஹார்முஸ் நீரிணை மிக முக்கிய பங்கு வகிக்கும் வேளையில், ஈரான் ராணுவப் படையின் இவ்வழித்தடத்தை மொத்தமாகக் கைப்பற்றி சரக்கு போக்குவரத்தைப் பெரிய அளவில் முடக்கியிருக்கிறது. இதனால் உலக நாடுகள் உடன் வர்த்தகத்தை மேம்படுத்த மாற்று வழிகளை அனைத்து வளைகுடா நாடுகளும் தேட துவங்கியுள்ளது.

இதில் முக்கியமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் துபாய், அபுதாபிக்குப் பின்பு பெரிய நாடாக இருக்கும் ஷார்ஜா இந்திய முதலீட்டாளர்களையும், நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் ஹார்முஸ் வழித்தட பாதிப்பு இல்லாத ஒமான் நாட்டிற்கு அருகில் இருக்கும் Khorfakkan துறைமுகத்தில் சுமார் 2 பில்லியன் டாலர் செலவில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள உள்ளது.

இந்தியாவுக்காக மட்டும்.. 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஷார்ஜா.. ஹார்முஸ் சிக்கலில் இருந்து விடுதலை..!!

இந்த விரிவாக்கம் மூலம் இப்பகுதியில் இந்திய உற்பத்தியாளர்கள், லாஜிஸ்ட்க்ஸ் நிறுவனங்கள் மூலம் அடுத்த 2 வருடத்தில் 3 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்க்க இலக்கு வைத்துள்ளதாக ஷார்ஜா முதலீட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகள் ஈரான் போர் மூலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக Khorfakkan துறைமுகம் இருக்கும் என நம்பப்படுகிறது, காரணம் இத்துறைமுகம் இருக்கும் இடம். ஹார்முஸ் வழித்தடத்திற்கும் தொலைவாகவும், ஒமான் நாட்டிற்கு அருகில் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் இருந்த சரக்கு கப்பல்கள் எளிதாக இத்துறைமுகத்தை அடைய முடியும். கார்ஃபக்கான் துறைமுகம் புஜைரா நில பகுதியில் அமைந்திருந்தாலும், முழுமையாக நிர்வாகம் செய்வது ஷார்ஜா அரசு.

இத்துறைமுகத்தின் மூலம் இந்திய உற்பத்தியாளர்களும், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களும் மிகவும் எளிதாக UAE, குவைத், சவுதி அரேபியா நாடுகளை அடையலாம். மேலும் இது ஹார்முஸ் வழித்தடத்திற்குத் தொலைவில் இருக்கும் காரணத்தால் எவ்விதமான தடையும், அச்சமும் இல்லாமல் இந்திய நிறுவனங்களால் வர்த்தகம் செய்ய முடியும் என்பதால் ஷார்ஜா இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஹார்முஸ் வழித்தடம் முடங்கியுள்ளதால் ஷார்ஜாவின் Khorfakkan துறைமுகம் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு முக்கிய கேட்வே ஆகத் திகழ்கிறது, எப்படி சவுதி அரேபியாவுக்குச் செங்கடலில் இருக்கும் யான்பு துறைமுகமே அதேபோல்.

ஷார்ஜா அரசின் கார்ஃபக்கான் துறைமுக விரிவாக்கம் மற்றும் இந்திய நிறுவனங்கள் குறித்து ஷார்ஜா FDI அலுவலகத்தின் சிஇஓ முகமது ஜுமா அல் முஷ்ரக் கூறுகையில், இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு 1.5 பில்லியன் டாலரும், அடுத்த ஆண்டு 1.5 பில்லியன் டாலர் முதலீட்டையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இப்பகுதியில் முதலீடு செய்வது மூலம் இந்தியா – யுஏஈ மத்தியிலான வர்த்தகம் பெரிய அளவில் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article

English summary

Bypassing Strait of Hormuz: Sharjah Invests $2 Billion in Khorfakkan Port to Attract $3 Billion Indian Capital

Bypassing Strait of Hormuz: Sharjah Invests $2 Billion in Khorfakkan Port to Attract $3 Billion Indian Capital — இந்தியாவுக்காக மட்டும்.. 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஷார்ஜா.. ஹார்முஸ் சிக்கலில் இருந்து விடுதலை..!!

Story first published: Thursday, October 8, 2026, 11:29 [IST]

Other articles published on Oct 8, 2026

Read More

Previous Post

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்: இப்போதான் புதின்கிட்ட பேசினேன்" – அதிபர் ட்ரம்ப் தகவல்

Next Post
“ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்: இப்போதான் புதின்கிட்ட பேசினேன்" – அதிபர் ட்ரம்ப் தகவல்

``ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்: இப்போதான் புதின்கிட்ட பேசினேன்" - அதிபர் ட்ரம்ப் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin