யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணலை அகழ்ந்து சட்டவிரோதமாக சேமித்து
வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அரியாலை பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி பெருந்தொகை மணலை ஒருவர் சேமித்து
வைத்திருப்பதாக காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சட்டவிரோதமான முறை
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கிருந்த நபரை கைது
செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அப்பகுதியில் உரிய
அனுமதிகள் இன்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 08 க்யூப் மணலை காவல்துறையினர் கைப்பற்றினர்.

அத்துடன் குறித்த மணல் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில்
சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுக்கப்பட்டவை என்பதனையும் விசாரணைகளில்
கண்டறிந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்த வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

