கோலாலம்பூர்:
2027-ஆம் ஆண்டுக்கான தேசிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ Seri அன்வார் இப்ராஹிம், தனிநபர் வருமான வரி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், ஆண்டுக்கு 70,000 ரிங்கிட் முதல் 100,000 ரிங்கிட் வரையும், 100,000 ரிங்கிட் முதல் 150,000 ரிங்கிட் வரையும் வருமானமுடையவர்களுக்கான வரி விகிதம் முறையே 18 சதவீதமாகவும் 24 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதோடு, தனிநபர் வருமான வரி நிவாரண வரம்பு 9,000 ரிங்கிட்டிலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பிள்ளைகளின் கல்வி மற்றும் அனைத்துப் படிப்புச் செலவுகளுக்கான கட்டணங்கள், AI சந்தாக்கள், பதிவு செய்யப்பட்ட மையங்களிலிருந்து செல்லப்பிராணிகளைத் தத்து எடுக்கும் செலவுகள் போன்றவற்றுக்கான வாழ்க்கை முறை வரி விலக்குகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



