Last Updated:
டெல்லியில் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை தடுக்க ரயில்கள் ரத்து மற்றும் 23,000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதற்கு திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து டெல்லியில் தீவிரம் அடைந்துவருகிறது. காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியினர் ஒரு பக்கம் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவரும் நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் பல்வேறு மாணவர்கள் அமைப்புகளும் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் அமைப்பினர் நாளை (10ஆம் தேதி) மாபெரும் போராட்டத்தை அறிவித்து, நாடு முழுவதும் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர். இந்நிலையில், டெல்லி செல்லும் பல்வேறு இரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி, மக்களின் ஜனநாயக குரலை அடக்க மோடி அரசு ஏன் துடிக்கிறது என திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “நாளை காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லிக்கு வரும் ரயில்கள் ரத்து. 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல். 23,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிப்பு.
மனோ தங்கராஜ்
இத்தனை நடவடிக்கைகளும் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளன. அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி, மக்களின் ஜனநாயகக் குரலை அடக்க மோடி அரசு ஏன் துடிக்கிறது?
நாளை காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லிக்கு வரும் ரயில்கள் ரத்து. 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல். 23,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிப்பு.
இத்தனை நடவடிக்கைகளும் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளன. அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி, மக்களின் ஜனநாயகக் குரலை அடக்க மோடி அரசு ஏன் துடிக்கிறது?13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால் எழுந்துள்ள சர்ச்சைக்கு விடை சொல்வதற்குப் பதிலாக, போராடும் மக்களைத் தடுக்க இத்தனை முயற்சிகள் ஏன்?
மோடி அவர்களே, நீங்கள் காப்பாற்றத் துடிப்பது ஜனநாயகத்தையா? அல்லது குறுக்கு் வழியில் உங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைக்க உதவும் தேர்தல் ஆணையரையா?
#delhiprotest #votetheft #eci #gyaneshkumar
— Mano Thangaraj (@Manothangaraj) October 9, 2026
13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால் எழுந்துள்ள சர்ச்சைக்கு விடை சொல்வதற்குப் பதிலாக, போராடும் மக்களைத் தடுக்க இத்தனை முயற்சிகள் ஏன்? மோடி அவர்களே, நீங்கள் காப்பாற்றத் துடிப்பது ஜனநாயகத்தையா? அல்லது குறுக்கு வழியில் உங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைக்க உதவும் தேர்தல் ஆணையரையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.


