Last Updated:
இடைத்தேர்தலில் காங்கிரஸின் போலி பரப்புரையை மக்கள் தடுத்துள்ளனர் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து
இந்தியாவில் மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 6ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினமான பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராரபும் ஆகிய இரண்டு தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்றது. இதேபோல், அசாமின் நகோன் மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டின் இரண்டு தொகுதிகளிலும் ஆளும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்துவருகின்றனர். தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றியை குறிப்பிட்டு, எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்குகள் நீக்கப்பட்டதாக காங்கிரஸின் போலி பரப்புரை முறியடிக்கப்பட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “SIR மூலமாக பல லட்ச வாக்காளர்களை நீக்கிவிட்டது தேர்தல் ஆணையம் என்ற, காங்கிரசின் போலி பரப்புரையை “பைசா”விற்கு கூட மதிக்காத புதுச்சேரி மக்கள்.
“SIR மூலமாக பல லட்ச வாக்காளர்களை நீக்கிவிட்டது” தேர்தல் ஆணையம் என்ற, காங்கிரசின் போலி பரப்புரையை “பைசா”விற்கு கூட மதிக்காத புதுச்சேரி மக்கள்!
புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதியின் இடைத்தேர்தலில், காங்கிரசின் அனைத்து பொய் பிரச்சாரங்களையும் முறியடித்து, சுமார் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார் NDA வேட்பாளரும், அனைத்திந்திய N.R காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திரு. அசோக் ஆனந்தன் அவர்கள்! அன்னாருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்!தங்களின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் விளக்கி ஓட்டுக் கேட்காமல், தேர்தல் ஆணையத்தின் மீதான ஆதாரமற்ற புகார்களை, அரசியல் பிரச்சாரமாக மாற்றினால் இப்படித்தான் “செல்லுமிடமெல்லாம் சவுக்கடி” கிடைக்கும் என்பதை @INCIndia எப்பொழுது தான் உணரப் போகிறதோ தெரியவில்லை!
— Nainar Nagenthran (@NainarBJP) October 9, 2026
புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதியின் இடைத்தேர்தலில், காங்கிரசின் அனைத்து பொய் பிரச்சாரங்களையும் முறியடித்து, சுமார் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார் NDA வேட்பாளரும், அனைத்திந்திய N.R காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அசோக் ஆனந்தன். அன்னாருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
தங்களின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் விளக்கி ஓட்டுக் கேட்காமல், தேர்தல் ஆணையத்தின் மீதான ஆதாரமற்ற புகார்களை, அரசியல் பிரச்சாரமாக மாற்றினால் இப்படித்தான் “செல்லுமிடமெல்லாம் சவுக்கடி” கிடைக்கும் என்பதை காங்கிரஸ் எப்பொழுது தான் உணரப் போகிறதோ தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


