Tamilnadu
oi-Vigneshkumar
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், கள நிலவரத்தை உடனுக்குடன் பார்க்கலாம்!


வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு!
மதுராந்தகம் தொகுதியிலும் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மற்றும் ஜானகிராமன் (நாம் தமிழர்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் சத்யபாமா (தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்), மற்றும் கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) ஆகிய 5 முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் வருகை!
இந்த இரு தொகுதிகளிலும் பொது தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் மற்றும் பி.சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

