• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஞானசார தேரர் காவி உடை அணிய அனுமதிக்கக் கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல்

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஞானசார தேரர் காவி உடை அணிய அனுமதிக்கக் கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகும்போது சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைக்கைதிக்குரிய உடையில் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 பௌத்த துறவிக்குரிய ஆடையை அணிந்திருக்கவேண்டும் 

ஞானசார தேரரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தும்போது, ​​அவர் தனது பௌத்த துறவிக்குரிய ஆடையை (பிக்கு ஆடை) அணிந்திருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

ஞானசார தேரர் காவி உடை அணிய அனுமதிக்கக் கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல் | Fr Petition Court Order Allow Gnanasara Wear Robes

மேலும், தேரரின் துறவிக்குரிய ஆடையைக் களைந்துவிட்டு சிறைக்கைதிக்குரிய உடையில் நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் முடிவானது, அரசியலமைப்பின் 10, 12(1) மற்றும் 14(1)(e) ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று அறிவிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

அரசியலமைப்பின் 9-வது பிரிவின்படி, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்து அதைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறவி நிலையை இழப்பதில்லை

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு நபர் தான் வழக்கமாக அணியும் ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் தொடர்பான நிலையான கட்டளை எண் 550 (Prison Standing Order 550) வலியுறுத்துவதாகவும் மனுதாரர் வாதிட்டுள்ளார்.

ஞானசார தேரர் காவி உடை அணிய அனுமதிக்கக் கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல் | Fr Petition Court Order Allow Gnanasara Wear Robes

 பௌத்த ஒழுக்கநெறி விதிகளின்படி, ஒரு துறவி சாதாரண குற்றவியல் குற்றம் ஒன்றில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவதால் மட்டும் தனது துறவி நிலையை இழப்பதில்லை என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது நடந்துகொண்ட விதம் தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆரம்பத்தில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.


பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது; இதன் விளைவாக அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் மீதமுள்ள காலம் நடைமுறைக்கு வந்தது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஏகாதசி என்றால் என்ன?

Next Post

“ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் இருந்து கைது செய்யும் அதிகாரம் பறிப்பு” –  ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவிப்பு

Next Post
“ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் இருந்து கைது செய்யும் அதிகாரம் பறிப்பு” –  ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவிப்பு

“ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் இருந்து கைது செய்யும் அதிகாரம் பறிப்பு” -  ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin