• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வைத்துள்ள முத்தரப்பு அமைதித் திட்டம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வைத்துள்ள முத்தரப்பு அமைதித் திட்டம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
உலகம்
/
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வைத்துள்ள முத்தரப்பு அமைதித் திட்டம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரைத் தணிக்க எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கருங்கடல் கப்பல் போக்குவரத்தை மையப்படுத்திய மூன்று அம்ச அமைதித் திட்டத்தை இந்தியா முன்வைத்துள்ளது.


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல்களைக் குறைக்கும் நோக்கில், எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல் மற்றும் கருங்கடல் வழியாக உணவு தானிய விநியோகத்தை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இந்தியா முன்வைத்துள்ளது. 

கடந்த செப்டெம்பர் மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உக்ரைன் தலைநகர் கீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது, இந்த யோசனை உக்ரைன் தலைமைத்துவத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அமைதித் திட்டத்தில், பொதுமக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அவசியமான முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது முதல் அம்சமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. 

மேலும், கருங்கடல்  துறைமுகங்கள் ஊடாக உணவு தானியங்கள் மற்றும் எரிசக்தி விநியோகத் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்தல் மற்றும் அப்பிராந்தியத்தில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகிய விடயங்கள் ஏனைய முக்கிய அம்சங்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் முத்தரப்பு யோசனையே மிகவும் விரிவானதும் முழுமையானதும் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் அன்ட்ரி சிபிகா தெரிவித்துள்ளார். 

எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தானிய விநியோகப் பாதுகாப்பை மட்டுமே வலியுறுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா எரிசக்தி போர்நிறுத்தத்தில் கவனம் செலுத்தியுள்ளது. எனினும், இந்தியா இந்த அனைத்து முக்கிய விடயங்களையும் ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து தீர்வு காண முனைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருங்கடல் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் ஐந்து இந்திய மாலுமிகள் அண்மைய வாரங்களில் கொல்லப்பட்டமை மற்றும் அந்நாட்டின் எரிசக்தி இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளமை போன்ற காரணிகளால், இந்தியா இப்பிராந்தியத்தின் அமைதியை உறுதிப்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டி வருகின்றது. 

மோதல்களில் ஈடுபடும் இரு தரப்பினரும் விரும்பி அழைத்தால் அமைதியை ஏற்படுத்த இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ள அதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைதி முயற்சிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் தனது வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Read More

Previous Post

சிலாங்கூர் மருத்துவமனை தாதியும் கணவரும் கோர விபத்தில் மரணம்; சுகாதார அமைச்சர் ஆழ்ந்த இரங்கல்! | Makkal Osai

Next Post

நான் நெனச்சா polling-யே நிறுத்திவிடுவேன்! பார்க்குறீங்களா? திமுக கிளைச் செயலாளர் உதார் | Maduranthagam DMK activist says that if reporters are not outsted, I will stop the election

Next Post
நான் நெனச்சா polling-யே நிறுத்திவிடுவேன்! பார்க்குறீங்களா? திமுக கிளைச் செயலாளர் உதார் | Maduranthagam DMK activist says that if reporters are not outsted, I will stop the election

நான் நெனச்சா polling-யே நிறுத்திவிடுவேன்! பார்க்குறீங்களா? திமுக கிளைச் செயலாளர் உதார் | Maduranthagam DMK activist says that if reporters are not outsted, I will stop the election

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin