உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையை வென்ற வங்கதேச அணி அதனை டி பிரிவு பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்திற்கு தள்ளியது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் டலாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்காவும், குசால் மெண்டிஸும் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே இலங்கை அணி விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. எனினும் மறுமுனையில் தொடக்க வீரர் நிசாங்கா சற்று நிலைத்து விளையாடி 47 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. 130 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியும் 28 ரன்களில் மூன்று முக்கிய விக்கெட்களை இழந்தது.
பின்னர் லிட்டன் தாஸ் 36 ரன்களும், , தவ்ஹித் 40 ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடைசிக் கட்டத்தில் வங்கதேச அணி மீண்டும் சரிவை சந்தித்தபோது, முகமதுல்லா ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணியின் சூப்பர் எயிட் (SUPER -8 ) சுற்றுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க – தோனி நினைத்தால் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆகலாம் – ஹெய்டன் சொன்ன பாயிண்ட் இதுதான்!
இந்த போட்டியின் அடிப்படையில் குரூப் டி –யில் தென்னாப்பிரிக்க முதலிடத்திலும், நெதர்லாந்து 2 ஆம் இடத்திலும், வங்கதேசம் 3 ஆம் இடத்திலும் உள்ளன. இவை அனைத்தும் தான் எதிர்கொண்ட 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. நேபாளம் 4 ஆம் இடத்திலும், இலங்கை அணி 5 ஆம் இடத்திலும் உள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
