• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

PM Modi 25 Years | பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு.. பிரதமர் மோடி இதுவரை சாதித்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
PM Modi 25 Years | பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு.. பிரதமர் மோடி இதுவரை சாதித்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் அனைத்துவிதமான வளர்ச்சி கொண்ட பயணத்திற்காக வழிவகுத்தார். முதலாவதாக, சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்களின் பலன் சென்றடையும் நோக்கில் ‘அந்தியோதயா (Antyodaya) கொள்கையை’ அமல்படுத்தினார். 2014ஆம் ஆண்டு அனைவருக்கும் வங்கிக் கணக்கு எனப்படும் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

இதன் மூலம் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரப்பட்டனர். இதன்மூலம் அரசின் திட்டங்கள், மானியங்கள் நேரடியாக மக்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டன. அதே ஆண்டில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று தூய்மையான இந்தியா இயக்கத்தை நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் கிராமப்புறங்களில் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டு, சுகாதார மேம்பாடு முன்னெடுக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, உஜ்வலா திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு கோடிக்கணக்கான எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டன. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் ஏழை, நடுத்த வருவாய் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும் திட்டம் கிராமங்கள் மட்டுமன்றி, நகர்ப்புறங்களில் தற்போதும் செயல்பட்டு வருகிறது. ஜல் ஜீவன் மூலம் கிராமப்புறங்களில் வீடுகளுக்கே குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: TANGEDCO | தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தட்டுப்பாடு.. மின்வாரியம் எடுத்த அதிரடி முடிவு!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. தற்போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம், தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

சிறு தொழில் மற்றும் சுயதொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் மூலம் முத்ரா கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பிணையில்லாமல் வழங்கப்படும் முத்ரா கடனின் அதிகபட்ச வரம்பு 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசில் டிஜிட்டல் இந்தியா மற்றும் UPI மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையும், அரசு சேவைகளின் டிஜிட்டல் பயன்பாடும் வேகமாக வளர்ந்துள்ளன.

அதேபோன்று, ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா, செமிகண்டக்டர் மிஷன், தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட முயற்சிகள் மூலம் தொழில்முனைவு, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, மெட்ரோ மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. UDAN திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

2023ஆம் ஆண்டு இந்தியா G20 தலைமைப் பொறுப்பை ஏற்று டெல்லியில் உச்சி மாநாட்டை மோடி தலைமையிலான அரசு நடத்தியது. சந்திரயான்-3 வெற்றி விண்வெளித் துறையில் இந்தியாவின் முக்கிய சாதனையாக அமைந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நிறைவடைந்து, 2024 ஜனவரி 22ஆம் தேதி பிரதிஷ்டை நடைபெற்றது. 2014ஆம் ஆண்டில் உலகின் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, அடுத்தடுத்த ஆண்டுகளில் வளர்ச்சி பெற்று, 2025ல் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

எதிர்காலத்தில் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை முன்னணி நாடாக உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Read More

Previous Post

60 தோட்டப்புறப் பாடசாலைகளில் ’ஸ்மார்ட்’ வகுப்பறைகள்

Next Post

RBI எபெக்ட்: வீட்டு கடன் வாங்கியவர்களின் ரூ.20000 EMI.. யாருக்கு எவ்வளவு உயரும்..? முழு விளக்கம்! | RBI Repo Rate Hike to 5.50%: How Much Will Your Home Loan EMI Increase? Check Complete Breakdown

Next Post
RBI எபெக்ட்: வீட்டு கடன் வாங்கியவர்களின் ரூ.20000 EMI.. யாருக்கு எவ்வளவு உயரும்..? முழு விளக்கம்! | RBI Repo Rate Hike to 5.50%: How Much Will Your Home Loan EMI Increase? Check Complete Breakdown

RBI எபெக்ட்: வீட்டு கடன் வாங்கியவர்களின் ரூ.20000 EMI.. யாருக்கு எவ்வளவு உயரும்..? முழு விளக்கம்! | RBI Repo Rate Hike to 5.50%: How Much Will Your Home Loan EMI Increase? Check Complete Breakdown

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin