• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மக்களே அடுத்த அதிர்ச்சி..!! உயர்கிறது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள்?? ஏர்டெல், ஜியோ பயனர்கள் கவனம் | Mobile Recharge Tariff Hike: Jio, Airtel, Vi Plans May Get 12–15% Costlier in 4–5 Months

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மக்களே அடுத்த அதிர்ச்சி..!! உயர்கிறது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள்?? ஏர்டெல், ஜியோ பயனர்கள் கவனம் | Mobile Recharge Tariff Hike: Jio, Airtel, Vi Plans May Get 12–15% Costlier in 4–5 Months
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மக்களே அடுத்த அதிர்ச்சி..!! உயர்கிறது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள்?? ஏர்டெல், ஜியோ பயனர்கள் கவனம்

இந்தியாவில் டெலிகாம் சேவையில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் துறைகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் அவ்வப்போது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை தருகின்றன. அந்த வகையில் விரைவில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற Centrum Institutional Research வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அடுத்த 4 முதல் 5 மாதங்களில் ரீசார்ஜ் கட்டணங்களை 12% முதல் 15% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ , பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வுக்கு திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே அடுத்த அதிர்ச்சி..!! உயர்கிறது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள்?? ஏர்டெல், ஜியோ பயனர்கள் கவனம்

சென்ட்ரம் அறிக்கையின்படி, அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாம். இந்த கட்டண உயர்வின் போது ஒவ்வொரு பயனரிடமிருந்தும் டெலிகாம் நிறுவனங்கள் ஈட்டும் ஒரு பயனருக்கான சராசரி வருமானம் (ARPU) 0.8% முதல் 2.0% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காலாண்டு அடிப்படையில் சுமார் 8 மில்லியன் புதிய சந்தாதாரர்களை சேர்த்து, தனது மொத்த பயனர் எண்ணிக்கையை 541 மில்லியனாக உயர்த்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜியோவின் ARPU தோராயமாக 218 ரூபாயாக உயரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் கூடுதலாக சுமார் 3 மில்லியன் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் புதிதாக 1 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்து, தனது மொத்த பயனர் தளத்தை 194 மில்லியனாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனங்ஜளின் வருவாயும் கணிசமான அளவு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் நாட்டின் 95 சதவீதத்திற்கும் அதிகமான மாவட்டங்களில் தங்கள் 5G சேவைகளை விரிவுபடுத்தியுள்ளன.

கட்டமைப்புகளுக்கான செலவுகள் முடிந்துவிட்டதால் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி அதன் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை பெருக்க திட்டமிட்டுள்ளன என அந்த அறிக்கை கூறுகிறது. அண்மையில் தான் டிராய் 30 நாட்கள் ரீசார்ஜ் திட்டம் கட்டாயம் என அறிவித்தது. எனவே அதற்கேற்ப ரீசார்ஜ் திட்டங்களை மாற்றி கட்டணங்களை நிறுவனங்கள் மாற்றி அமைக்கும் என செண்ட்ராம் அறிக்கை கூறுகிறது.

இந்த கட்டண உயர்வு உறுதியானால், சாதாரண ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் டேட்டா மற்றும் காலிங் சேவைகளுக்காக வழக்கத்தை விட 12% முதல் 15% வரை கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டி வரும்.

300 ரூபாய் ரீசார்ஜ் செய்பவர்கள் கட்டண உயர்வுக்கு பின் 12% உயர்வு என்ரால் 336 ரூபாயாக செலுத்த வேண்டி இருக்கும். ஏற்கனவே பல பொருட்களின் விலைவாசி உயர்ந்து வருகிறது, வங்கி கடன் வட்டிகள் உயர போகின்றன, இந்த சூழலில் ரீசார்ஜ் கட்டணமும் உயர்வது மக்களின் பாக்கெட்டிலேயே கை வைக்க போகிறது.

Share This Article

English summary

Mobile Recharge Tariff Hike: Jio, Airtel, Vi Plans May Get 12–15% Costlier in 4–5 Months

மக்களே அடுத்த அதிர்ச்சி..!! உயர்கிறது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள்?? ஏர்டெல், ஜியோ பயனர்கள் கவனம் / Reliance Jio, Bharti Airtel and Vodafone Idea may increase mobile recharge tariffs by 12% to 15% within the next four to five months, according to a Centrum Institutional Research report.

Story first published: Wednesday, October 7, 2026, 16:08 [IST]

Other articles published on Oct 7, 2026

Read More

Previous Post

மஞ்சள் ஜெர்சியில் களமிறங்கும் பொல்லார்ட்.. இனி நீங்க சூப்பர் கிங்ஸ் பட்டறை சார்! புலம்பும் பல்தான்ஸ் | CSK: Kieron Pollard joings CSK Family of JSK team to play in the SA20 League 2027

Next Post

பிரேசில்: முதல் சுற்றில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை – 25ம் தேதி மீண்டும் தேர்தல் …

Next Post

பிரேசில்: முதல் சுற்றில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை – 25ம் தேதி மீண்டும் தேர்தல் …

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin